கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் நவ.30-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தின் 26-வது நாளான நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்றார். அவர், செய்தியாளர்களிடம் கூறியது: விவசாயிகள் வாங்காத கடனை செலுத்தச் சொல்வது நியாயமில்லை. அவர்களைக் கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்தப் போராட்டம் தொடர்பாக வேளாண் துறை அமைச்சரை நேரில் சந்தித்து, விவசாயிகள் பெயரில் வாங்கிய கடனை ஆலை நிர்வாகம்தான் ஏற்க வேண்டும் என்பது உட்பட விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தினேன். இதற்கு, விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது. இதுதொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலனை செய்கிறேன்.
இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண முடியாது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு என்ன செய்ய முடியுமோ அதை செய்ய முயற்சி செய்கிறேன் என்றார் அமைச்சர். வங்கி அதிகாரிகளும், ஆலை நிர்வாகமும் இணைந்து கூட்டுக் கொள்ளையை நடத்தியுள்ளார்கள்.
இங்கு போராடி வரும் விவசாயிகளுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், தமிழக அரசுதான் பதில் சொல்ல வேண்டி வரும். இந்தப் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வரை சந்தித்துப் பேச முயற்சி மேற்கொள்ளப்படும். கரும்பு விவசாயிகள் பிரச்சினைக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago