குமுளி: தேனி மாவட்டத்தில் தமிழக எல்லையான குமுளி மலைப் பாதையில் தடுப்புச் சுவர் மீது கார் மோதி நூறு அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் நேற்று அதிகாலை மீட்கப்பட்டன.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, சண்முகசுந்தரபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 10 ஐயப்ப பக்தர்கள் 3 நாட்களுக்கு முன்பு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு காரில் சென்றனர். சபரிமலையில் தரிசனம் செய்த பிறகு ஆண்டிபட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.50 மணி அளவில் தமிழக-கேரள எல்லையான குமுளியைக் கடந்து மலைச் சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. காரை பிச்சம்பட்டியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(42) என்பவர் ஓட்டி வந்தார்.
மலைப் பாதையின் முதல் பாலத்தின் அருகில் உள்ள கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது கார் கட்டுப்பாட்டை இழந்தது. தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு 100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.
» இஎஸ்ஐ-யில் 2 ஆயிரம் மருத்துவர்கள் உட்பட 6,400 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை - மத்திய அமைச்சர் தகவல்
» 26 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரம்
பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் வரும் மலைச் சரிவில் உள்ள ராட்சதக் குழாய்கள் மற்றும் அதன் தடுப்புச் சுவரில் மோதியதில் கார் பலத்த சேதம் அடைந்தது.
விபத்தில் காரில் பயணம் செய்த சக்கம்பட்டி முனியாண்டி(55), ஆண்டிபட்டி பத்திர அலுவலகச் சாலையைச் சேர்ந்த தேவதாஸ்(55), சிவக்குமார்(45), மறவபட்டி சாவடி தெருவைச் சேர்ந்த கண்ணுச்சாமி(55), ஆண்டிபட்டி மயானச் சாலையை சேர்ந்த நாகராஜ்(46), சண்முக சுந்தரபுரம் கிராமத்தைச் சேர்ந்த வினோத்(47), டி.பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்வன்(45) ஆகிய 7 ஐயப்ப பக்தர்கள் அதே இடத்தில் உயிரிழந்தனர்.
கார் ஓட்டுநர் கோபாலகிருஷ்ணன்(42) தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மேலும் ஆண்டிபட்டி கோழிப்பண்ணை தெருவைச் சேர்ந்த ராஜா(40), இவரது மகன் ஹரிஹரன்(7) ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் தேனி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதிகாலை வரை மீட்புப் பணி: கார் கவிழ்ந்ததும் பின்னால் காரில் வந்தவர்கள் உடனே 108ஆம்புலன்ஸுக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து குமுளியில் பாதுகாப்புப் பணியில் இருந்த தமிழக போலீஸார், வனத் துறையினர், தீயணைப்புத் துறையினர், பக்தர்கள், பொதுமக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கார் மற்றும் உடல்கள் நேற்று அதிகாலையில் மீட்கப்பட்டன.
தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ்டோங்கரே சம்பவ இடத்தை பார்வையிட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கும், இறந்தவர்களின் உறவினர்களுக்கும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் ஆகியோர் ஆறுதல் கூறினர். விபத்து குறித்து குமுளி போலீஸார் விசாரிக்கின்றனர்.
தலைவர்கள் இரங்கல்: 8 ஐயப்ப பக்தர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவத்துக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago