ஆளுநர் ஆர்.என்.ரவி கிறிஸ்துமஸ் வாழ்த்து: கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

சென்னை: கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில்,"தமிழ்நாட்டு மக்களுக்கு குறிப்பாக நமது கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு எனது அன்பான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக அன்புடனும், இரக்கத்துடனும் பூமியை ஆசீர்வதித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடப்படுகிறது.

அவருடைய மன்னிப்புச் செய்தி மனிதகுலத்திற்கான விலைமதிப்பற்ற பரிசாகும். மேலும், நாம் அனைவரும் ஒரே குடும்பம், நமக்கு ஒரே எதிர்காலம் என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை நம் அனைவருக்கும் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கத்தை வழங்கட்டும். பல்வேறு நாடுகளில் அதிகரித்து வரும் கோவிட் 19 பெருந்தொற்றை கருத்தில் கொண்டு, கோவிட் நெறிமுறைகளைக் கடைபிடித்து கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அந்த செய்தியில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்