10 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமை செயலர் அந்தஸ்து வழங்கல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் ராதாகிருஷ்ணன், ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட 10 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தலைமைச் செயலர் வெ.இறையன்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 1992-ல் நேரடி ஐஏஎஸ் அதிகாரிகளான, கூட்டுறவு, உணவுத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ் ணன், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை கூடுதல் செயலர் ராஜேந்திர குமார், தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் நீரஜ் மித்தல், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் ராஜேஷ் லக்கானி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறை செயலர் மங்கத்ராம் சர்மா, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலர் பிரதீப் யாதவ், வருவாய்த்துறை செயலர் குமார் ஜெயந்த், போக்குவரத்துத் துறை செயலர் கே.கோபால் ஆகியோருக்கு தலைமைச் செயலர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சம்பந்தப்பட்ட பதவிகளில் அவர்கள் கூடுதல் தலைமைச் செயலர்களாக செயல்படுவார்கள். மேலும், அவர்கள் பணியாற்றும் துறைபதவிகளும் கூடுதல் தலைமைச்செயலர் நிலைக்கு உயர்த்தப்பட் டுள்ளது. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 மாவட்ட வருவாய் அலுவலர்: இதுதவிர, தமிழ்நாடு பேரிடர் தணிப்பு முகமையின் இணை இயக்குநர் வி.ஆர்.சுப்புலட்சுமி, சிப்காட் நிறுவன பொது மேலாளர் பி.ரத்தினசாமி, தேசிய சுகாதார இயக்க மாநில திட்ட மேலாளர் அழகுமீனா ஆகியோருக்கு ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. மேலும், 17 மாவட்ட வருவாய் அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE