‘வார்தா’ புயல் நிவாரணப் பணியால் தாமதம்: கடல் ஆமை முட்டை சேகரிப்பு பணி அடுத்த வாரம் தொடக்கம்

By ச.கார்த்திகேயன்

கடல் ஆமைகளை பாதுகாக்கும் விதமாக சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடல் ஆமை முட்டைகள் சேகரிப்பு பணியை வனத்துறை அடுத்த வாரம் தொடங்குகிறது. வழக்கமாக டிசம்பர் மாதத்தில் தொடங்கும் இப்பணி, ‘வார்தா’ புயல் நிவாரணப் பணியால் தாம தமாக, வரும் ஜனவரியில் தொடங்கப்பட உள்ளது.

உலகில் 60 சதவீத மக்கள் கடலில் உள்ள மீன் வளத்தை சார்ந்து வாழ்கின்றனர். மனித உணவுத் தேவையில் 20 சதவீதத்தை கடல் மீன் உணவுகள் பூர்த்தி செய்கின்றன. மீன் உணவுத் தொழிலில் உலக அளவில் நேரடியாகவும், மறைமுகமாகவும் கோடிக் கணக்கானோர் ஈடுபட்டு வரு கின்றனர். இத்தகைய மீன் வளத்தை அழிக்கும் சக்தியாக ஜெல்லி மீன்கள் விளங்குகின்றன. இவை, மீன் குஞ்சுகளை உணவாக உண் பதால் கடலில் மீன் வளம் குறைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மீனவ நண்பன்

இந்த ஜெல்லி மீன்களின் இயற்கை எதிரியாக கடல் ஆமைகள் உள்ளன. அவை ஜெல்லி மீன்களைதான் விரும்பி உண்கின்றன. அதனால் கடல் ஆமைகள் மீன் வளத்தை பெருக்கும் சக்தியாகவும், மீன வர்களின் நண்பனாகவும் திகழ் கின்றன. மேலும் மீன்களுக்கு உணவாகும் பவளப் பாறைகளில் வளரும் பாசிகள் பெருக்கத்துக்கும் உதவி புரிகின்றன.

அழிவைத் தடுக்க நடவடிக்கை

கடல் ஆமைகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் முதல் வாரம் வரை கடலோரப் பகுதியில் அதிகாலை நேரங்களில் முட்டையிடும். இம்முட்டைகளை நாய்களும், பறவைகளும் சிதைப் பதால், கடல் ஆமை இனம் அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதன் அழிவைத் தடுக்கும் நடவடிக்கையாக வனத்துறை சார்பில் கடந்த 2012 முதல் தமிழக கடலோரப் பகுதியில் இடப்படும் முட்டைகள் சேகரிக்கப்பட்டு, பெசன்ட்நகர் உள்ளிட்ட 3 இடங் களில் உள்ள ஆமை குஞ்சு பொறிப் பகங்களில் பொறிக்கப்பட்டு வரு கின்றன.

‘வார்தா’ புயலால் தாமதம்:

ஆண்டுதோறும் தன்னார் வலர்களுடன் வனத்துறையினர் இரவு நேரங்களில் மெரினா, பெசன்ட்நகர், கோவளம் ஆகிய கடலோரப் பகுதியில் ரோந்து சென்று ஆமை முட்டைகளை சேகரித்து, குஞ்சு பொறிப்பகத்துக்கு அனுப்புகின்றனர். அங்கு 45 நாட்கள் அடைகாத்தலுக்கு பிறகு வெளிவரும் ஆமை குஞ்சு கள், கடலில் விடப்படுகின்றன. கடந்த பருவத்துக்கு முந்தைய பருவத்தில் (டிசம்பர் 2014- ஏப்ரல் 2015), 12 ஆயிரத்து 336 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு, அதில் 11 ஆயிரத்து 521 குஞ்சுகள் பொறித்தன. கடந்த பருவத்தில் டிசம்பர் மாதம் சென்னை, திரு வள்ளூர், காஞ்சிபுரம் மாவட் டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அம்மாதம் ஆமைகள் முட்டையிடவில்லை.

இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கிய பருவத்தில், வார்தா புயல் தாக்கியதால், கடல் ஆமை முட்டை சேகரிப்பு பணியை வனத்துறை இதுவரை தொடங்க வில்லை.

இது தொடர்பாக வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘வார்தா’ புயலால் வனத்துறைக்கு சொந்தமான வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் லட்சக்கணக்கான மரங்கள் விழுந்துள்ளன. இவற்றை போர்க்கால அடிப்படையில் அகற்றும் பணி நடைபெற்று வந்தது. இங்குள்ள வனத்துறை ஊழியர்கள் போதாததால், வெளி மாவட்டங்களில் இருந்து நூற்றுக் கணக்கான பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனால், முட்டை சேகரிப்பு பணியை கவனிக்க முடியவில்லை. அடுத்த வாரம் தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்