சென்னை: செல்போன் திருடியதாக போலீஸ் விசாரணைக்கு சென்றுவீடு திரும்பிய இளைஞர் மரணமடைந்த வழக்கு சிபிசிஐடி பிரிவு போலீஸார் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னை திருவிக நகர், நீலம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார் (26). இவர் மீது சென்னையிலுள்ள பல்வேறு காவல் நிலையங்களில் குற்றவழக்குகள் உள்ளன. ரவுடிகளின்பட்டியலில் ‘பி’ பிரிவில் போலீஸார் இவரை வைத்திருந்தனர். இந்நிலையில், கடந்த 20-ம் தேதிசெல்போன் பறிப்பு தொடர்பாக இவரிடம் துரைப்பாக்கம் போலீஸார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
அன்றைய தினமே தினேஷ்குமாருக்கு உடல் நலக்குறைவுஏற்பட்டுள்ளது. இதற்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார். இந்நிலையில், அன்று இரவு10.30 மணியளவில் வீட்டில் வாந்திஎடுத்து உயிரிழந்தார்.
விசாரணை என்ற பெயரில் துரைப்பாக்கம் போலீஸார் தாக்கியதே தினேஷ் குமார் மரணத்துக்கு காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இதுகுறித்து திருவிக நகர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.
» 91 நாட்டில் பிஎஃப்-7 வைரஸ் - 2 ஆண்டுக்கு முன்பே பரவல்
» சிக்கிமில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து - 16 வீரர்கள் பரிதாப உயிரிழப்பு
அதன்படி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், தினேஷ் குமார் மரணம்குறித்து எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஜெகதீசும் தனியாக விசாரித்து வருகிறார்.
மரணம் அடைந்த தினேஷ்குமாரின் மனைவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார். அதில், ‘எனக்கு திருமணமாகி நான்கரை வயதில் வினோதினி என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த 20-ம் தேதி என்னை போனில் தொடர்பு கொண்ட போலீஸார், எனது கணவர் தினேஷ் குமாரை அழைத்துச் செல்லுமாறு தெரிவித்தனர். அப்போது, எனது கணவர் காயங்களுடன் வலியோடு இருந்தார். போலீஸார் தன்னை துன்புறுத்தியதாக தெரிவித்தார்.
இதையடுத்து அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் உயிரிழந்து விட்டார். போலீஸார் துன்புறுத்தியதாலேயே எனது கணவர் இறந்துள்ளார்.
எனவே, சம்பந்தப்பட்ட துரைப்பாக்கம் போலீஸார் மீதுகொலை வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், எனது குழந்தையின் எதிர்காலத்துக்காக இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தினேஷ் குமார்மரண வழக்கை சிபிசிஐடி பிரிவுபோலீஸார் விசாரிக்க டிஜிபிசைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தினேஷ் குமார் விவகாரம்தொடர்பாக துரைப்பாக்கம் காவல் நிலையத்தைச் சேர்ந்த 2 உதவி ஆய்வாளர்கள், ஒரு தலைமைக் காவலர், ஒரு காவலர் என 4 போலீஸார் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். எனது கணவர் காயங்களுடன் வலியோடு இருந்தார். போலீஸார் தன்னை துன்புறுத்தியதாக தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago