கணிதத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கிய 3 வெளிநாட்டினருக்கு சாஸ்த்ரா ராமானுஜன் விருது

By செய்திப்பிரிவு

சென்னை: கணிதம் சார்ந்த ஆராய்ச்சிகளில் ஸ்ரீநிவாச ராமானுஜன் போன்று சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக வெளிநாட்டினர் 3 பேருக்கு ‘சாஸ்த்ரா ராமானுஜன் விருது’ வழங்கப்பட்டது.

இதுகுறித்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜெருசலேம் ஹீப்ரூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்காய் இவ்ரா, அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வில் சாவின், கலிபோர்னியா பெர்க்லே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யுன்குயிங் டேங் ஆகியோருக்கு முறையே 2020, 2021 மற்றும் 2022 ஆண்டுகளுக்கான நிவாச ராமானுஜன் விருது வழங்கப்பட்டது.

32 வயதுக்கு உட்பட்ட கணிதவியலாளர்களுக்கான இந்த விருது, 10 ஆயிரம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.8.3 லட்சம்), பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியது. நிவாச ராமானுஜனின் பிறந்த நாளை முன்னிட்டு சாஸ்த்ரா வளாகத்தில் மைண்ட்ட்ரீயின் இணை நிறுவனர் என்.எஸ்.பார்த்தசாரதியால் இவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

நிவாச ராமானுஜன் பற்றிய 3 நாள் சர்வதேச மாநாடு நடைபெற்ற போது, அதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மற்றும் 10 பேச்சாளர்கள் கலந்துகொண்டனர். இதில் நிவாச ராமானுஜன் பிறந்தநாள் நினைவுச் சொற்பொழிவை ஆன்லைனில் வழங்கிய டேங்குடன் இவர்கள் சிறந்த விரிவுரைகளை வழங்கினார்கள்.

சாஸ்த்ரா துணைவேந்தர் எஸ்.வைத்தியசுப்பிரமணியம் தனது வரவேற்பு உரையில், 2023-ம் ஆண்டு சாஸ்த்ரா வளாகத்தில் நடைபெறும் மாநாட்டுக்கு ஏற்கெனவே விருது பெற்ற 6 பேரை அழைத்து வரத் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 secs ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்