சென்னை: கோவையில் உள்ள ஆ.ராசாவின் ரூ.55 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் பினாமி சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்ததையடுத்து, அவர் மீது 2015-ம் ஆண்டு சிபிஐ வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியது. அப்போது, சென்னை, கோவை, திருச்சி, பெரம்பலூரில் ஆ.ராசாவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றி, ஆ.ராசா உள்ளிட்ட 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இதன் அடிப்படையில் அமலாக்கத்துறையும் தனியாக வழக்குபதிவு செய்து, விசாரணையை நடத்தியது. 2004 முதல் 2007-ம் ஆண்டு வரை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தபோது, குருகிராமில் உள்ள இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதிகளை ஆ.ராசா வழங்கியதும், அதற்காக அந்நிறுவனம் ஆ.ராசாவுக்கு லஞ்சமாக குறிப்பிட்ட தொகையை வழங்கியதும் விசாரணையில் தெரியவந்ததாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், லஞ்சமாகப் பெற்ற பணத்தை ஆ.ராசா தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரில் தொடங்கிய பினாமி நிறுவனம் மூலம் வருமானமாக கணக்கு காட்டியதும் அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், அந்த நிறுவனம் ஆரம்பத்தில் இருந்து எந்த ஒரு வணிக நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும், நிறுவனத்தில் பெறப்பட்ட முழு பணமும் ரியல் எஸ்டேட் ஒப்பந்தத்தில் இருந்து லஞ்சமாக பெறப்பட்டது என்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
» ஜெர்மனியின் மெட்ரோ குழுமத்தின் இந்திய மொத்த விற்பனை பிரிவை ரூ.2,850 கோடிக்கு வாங்கியது ரிலையன்ஸ்
இதனடிப்படையில், கோவையில் பினாமி பெயரில் ஆ.ராசா வாங்கியுள்ள ரூ.55 கோடி மதிப்புள்ள 45 ஏக்கர் நிலத்தை மத்திய அமலாக்கத்துறை நேற்று முடக்கியுள்ளது. இந்த சொத்தை லஞ்சமாக பெறப்பட்ட பணத்தில் இருந்து வாங்கியதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
32 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago