சென்னை: சென்னையில் இயங்கி வந்த சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டு இந்தியன் வங்கியில் ரூ.235 கோடி கடன் பெற்றது. இந்த கடனை முறைகேடாக பெற்று சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்து மோசடி செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் மீது வங்கியின் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி கே.எல்.குப்தா சிபிஐயில் புகார் அளித்தார். அதன்பேரில் நிறுவனத்தின் பங்குதாரர்கள் 2 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சட்டவிரோத பணப்பரி மாற்றம் விவகாரம் என்பதால், அமலாக்கத்துறை சார்பிலும் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, அந்நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.234.75 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை கடந்த ஜூலை மாதம் அமலாக்கத்துறை முடக்கியது. இந்நிலையில், தற்போது ஒரு தனியார் வங்கியை ஏமாற்றி சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனம் மீது எழுந்த புகாரையடுத்து, அந்நிறுவனத்துக்கு சொந்தமான சென்னையில் உள்ள ரூ.66.93 கோடி மதிப்பு அசையா சொத்துகளை அமலாக்கத்துறை நேற்று முடக்கி உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago