சென்னை: வெளிநாட்டு நிறுவனங்கள் அதிகஅளவில் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வருவதால், அதற்கான ஒப்பந்தங்கள், அனுமதிகள் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி சென்றுள்ள அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
டெல்லியில் 15-வது நிதிக்குழுவில் பங்காற்றியவர்கள் எழுதிஉள்ள புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க சென்றுள்ள தமிழகநிதியமைச்சர் பழனிவேல்தியாகராஜன், அங்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கர், தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, விமானபோக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோரை சந்தித்தார்.
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது: வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கரை சந்தித்தேன். தமிழகத்தில் முதலீடு செய்ய பல்வேறு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், தமிழகத்தின் எதிர்பார்ப்புகள் குறித்து அவரிடம் தெரிவித்தேன். சாலை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிதின்கட்கரியை சந்தித்தேன்.
முன்னதாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், அவருடன் நான் பங்கேற்றபோது, கோரிக்கைகள் சில வைத்தேன். நேரில் வந்து பார்க்கும்படி கூறினார். அவரை சந்தித்து, மதுரையில் வெளிவட்டச்சாலை பணிகளை விரைவுபடுத்தவும், மதுரை- கொச்சி நெடுஞ்சாலை பணிக்கு,விரிவான திட்ட அறிக்கை அளித்தபின்னரும் அப்பணிகள் தொடங்காதது குறித்து கோரிக்கை விடுத்தேன். அவரும், பல திட்டங்களை என்னிடம் தெரிவித்தார்.
» குறு, சிறு, சுய தொழில் கடன் பிரிவில் அதிக கவனம் - ஸ்ரீ ராம் பைனான்ஸ் அறிவிப்பு
» ஜெர்மனியின் மெட்ரோ குழுமத்தின் இந்திய மொத்த விற்பனை பிரிவை ரூ.2,850 கோடிக்கு வாங்கியது ரிலையன்ஸ்
விளக்கங்கள் அளித்தார். பல புதிய நிதித்திட்டங்களையும் தெரிவித்தார். நீர்மேலாண்மை உள்ளிட்டவை குறித்தும் தெரிவித்தார். தனிப்பட்ட கருத்துகளை முதல்வரிடம் தெரிவிக்கும்படியும் கூறியுள்ளார்.
மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை சந்தித்தேன். மதுரைவிமான நிலையத்துக்கு சர்வதேசவிமான நிலைய அந்தஸ்து அளித்து, மத்திய பாதுகாப்புப்படை, சுங்கத்துறை வசதிகள் செய்ய வேண்டும். நில எடுப்பு முடித்த பின்னரும், விமான நிலைய விரிவாக்கம் நிலுவையில் உள்ளது குறித்து விவரிக்கப்பட்டது. பரந்தூர் விமான நிலையத்துக்கான விண்ணப்பம் வந்துள்ளது. அதற்கான அனுமதி பணிகளையும் விரைவுபடுத்த உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள வருவாய்த்துறை செயலரும், ஜிஎஸ்டி கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளருமான மல்ஹோத்ராவை சந்தித்து ஜிஎஸ்டி கவுன்சில் தொடர்பான விஷயங்கள், இருவகையான வரிவிதிப்புகள், புதிய கோரிக்கைகளை வைத்துள்ளேன்.
வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பின்போது நிதி தொடர்பாகவும், வெளிநாடுகளுடனான ஒப்பந்தங்கள், உலக வளர்ச்சி வங்கிகள் தொடர்பாகவும் நான் பேசினேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
29 secs ago
தமிழகம்
13 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago