சென்னை: சென்னை ஐசிஎஃப்-ல் 7-வது வந்தே பாரத் ரயில் தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இந்த ரயில் ஓரிரு நாட்களில் ஹவுராவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இது ஹவுரா-நியூ ஜல்பைகுரி இடையே இயக்கப்படவுள்ளது.
சென்னை பெரம்பூரில் உள்ளஒருங்கிணைந்த ரயில் பெட்டித்தொழிற்சாலையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு, இந்திய ரயில்வேக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, வெளிநாடுகளுக்கும் ரயில் பெட்டிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், சென்னை ஐசிஎஃப்-ல் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் ரூ.97 கோடியில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு, டெல்லி-வாரணாசி, டெல்லி-காத்ரா இடையே இயக்கப்படுகின்றன. இதுபோல, அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் 4 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டன. இவற்றில், 4-வது வந்தே பாரத் ரயில், தென்னிந்தியாவில் மைசூர்-சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படுகிறது. 6-வது வந்தே பாரத் ரயில், பிலாஸ்பூர்-நாக்பூர் இடையே இயக்கப்படுகிறது.
இதையடுத்து, 7-வது வந்தே பாரத் ரயில் தயாரிக்கும் பணி ஐசிஎஃப்-ல் கடந்த சில வாரங்களாக மும்முரமாக நடைபெற்று வந்தது. தற்போது இந்தப் பணி நிறைவடைந்துள்ளது. எனவே இந்த ரயில் ஓரிரு நாட்களில் ஹவுராவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
» ஜெர்மனியின் மெட்ரோ குழுமத்தின் இந்திய மொத்த விற்பனை பிரிவை ரூ.2,850 கோடிக்கு வாங்கியது ரிலையன்ஸ்
இதுகுறித்து ஐசிஎஃப் அதிகாரிகள் கூறியதாவது: நாட்டின் மிகப் பிரபலமான ரயிலாக வந்தே பாரத் ரயில் திகழ்கிறது. ஹவுரா-நியூ ஜல்பைகுரி இடையேயான 7-வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி வரும் 30-ம் தேதி தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐசிஎஃப்-ல் ஒரு மாதத்தில் 2 வந்தே பாரத் ரயில்களை தயாரித்து வழங்கியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
50 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago