மதுரை: ஆங்கில புத்தாண்டு விடுமுறை தினத்தையொட்டி பயணிகளின் வசதிக்காக தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
நாகர்கோவில் - தாம்பரம் பண்டிகை கால சிறப்பு கட்டண ரயில் (06042) டிச. 26-ல் நாகர்கோவிலில் இருந்து மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயிலில் 2 குளிர்சாதன முதல் வகுப்புடன் கூடிய இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வசதியுள்ள பெட்டி ஆகியவை இணைக்கப்படும். நாகர்கோவில் - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு கட்டண ரயில் (06020) நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 1-ம் தேதி மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
மறுமார்க்கத்தில் தாம்பரம் - நாகர்கோவில் அதி விரைவு சிறப்பு கட்டண ரயில் (06019) தாம்பரத்திலிருந்து ஜனவரி 2 பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.55 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். இந்த ரயில்கள் விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, வள்ளியூர் உள்ளிட்ட ரயில் நிலை யங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான பய ணச்சீட்டு முன்பதிவு இன்று (டிச.23) காலை தொடங்குகிறது என மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
36 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago