காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் 11 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

By செய்திப்பிரிவு

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் காரைக்கால்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.ராஜ்குமார்(31). இவர் தனக்குச் சொந்தமான விசைப் படகில், அதே ஊரைச் சேர்ந்த தங்கவேலு, ஆறுமுகம், பிரபு, மதன், மாணிக்கவேல் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் வாணகிரியைச் சேர்ந்த தண்டபாணி, செந்தில், பெருமாள்பேட்டை முத்துவேல், செல்வமணி, குட்டியாண்டியூர் கண்ணதாசன் ஆகியோருடன், டிச.18-ம் தேதி அதிகாலை காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றார்.

இவர்கள் நேற்று காலை 11 மணியளவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் அங்கு வந்து, எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, படகுடன் மீனவர்கள் 11 பேரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர். அவர்களை மீட்க வலியுறுத்தி காரைக்கால்மேடு மீனவ கிராம பஞ்சாயத்தார், மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவர் நலத் துறை துணை இயக்குநரிடம் நேற்று மனு அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்