அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த திருப்பதி தேவஸ்தான அதிகாரி மகன் மாரடைப்பால் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அலுவலர் தர்மா ரெட்டி. இவரது மகன் சந்திரமவுலி ரெட்டி. இவருக்கும், திருமலை திருப்பதி தேவஸ்தானம் (தமிழகம், புதுச்சேரி) ஆலோசனைக்குழு தலைவரும், தொழிலதிபருமான சேகர் ரெட்டி மகளுக்கும் வரும் ஜனவரி மாதம் திருமணம் நடைபெற இருந்தது.

சந்திரமவுலி கடந்த 18-ம் தேதி மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ்களை கொடுக்க சென்றபோது, சந்திரமவுலிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனையில் அவரது இதயம் செயலிழந்திருப்பது தெரியவந்தது. அவருக்கு எக்மோ கருவிஉதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், அவரதுஉடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் நேற்று காலை சந்திரமவுலி உயிரிழந்தார். அவருடைய விருப்பத்தின்படி, அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்