இருதரப்பு அதிகாரிகள் மீண்டும் ஆலோசனை: மெட்ரோ ரயில் பெட்டி தயாரிக்க ஐசிஎப் திட்டம் - 30 சதவீதம் செலவு குறைக்க முடியும்

By கி.ஜெயப்பிரகாஷ்

பெரம்பூரில் உள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎப்) சென்னை மெட்ரோ நிறுவனத்துக்கு ரயில் பெட்டி தயாரிப்பது தொடர்பாக இரு தரப்பு அதிகாரிகளும் மீண்டும் ஆலோசனை நடத்தி வருகின் றனர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகை யில் 2 வழித்தடங்களில் மொத் தம் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. தற் போது, பரங்கிமலை கோயம் பேடு, விமானநிலையம் ஆலந் தூர் சின்னமலை இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக கோயம்பேட்டில் இருந்து நேரு பூங்காவுக்கு சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் இயக்கப்படவுள் ளது.

சென்னை மெட்ரோ ரயிலுக் காக 4 பெட்டிகளைக் கொண்ட மொத்தம் 42 ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த அல்ஸ்டாம் என்ற தனியார் நிறுவனம் ஆந்திர மாநிலம், சிட்டியில் மெட்ரோ ரயில் பெட்டி தயாரிக்கும் பணிக் காக தனது கிளை நிறுவனத்தை நிறுவி, அங்கு மெட்ரோ ரயில்களை தயாரித்து வருகிறது.

இந்நிலையில், வண்ணாரப் பேட்டை விம்கோநகர் விரிவாக் கம், மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-வது கட்டத்தில் மாதவரத்தில் மயிலாப்பூர் சிறுசேரி, மாதவரம் - கோயம்பேடு, பெரும்பாக்கம் - சோழிங்கநல்லூர், நெற்குன்றம் விவேகானந்தர் இல்லம் என மொத்தம் 114 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் இயக்குவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில்களை இயக்க சுமார் 60-க்கும் மேற்பட்ட மெட்ரோ ரயில்கள் தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

பெரம்பூரில் உள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎப்) சென்னை மெட்ரோ நிறுவனத்துக்கு ரயில் பெட்டி தயாரிப்பது தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத் தப்பட்டது. ஆனால், எந்த முன் னேற்றமும் ஏற்படாமல் கிடப்பில் இருந்தது. இந்நிலையில், இத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்து வது தொடர்பாக மெட்ரோ ரயில்வே நிர்வாக அதிகாரிகள், ஐசிஎப் அதிகாரிகளுடன் சமீபத் தில் ஆலோசனை நடத்தினர்.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு தேவை யான பெட்டிகள் தயாரிப்பது தொடர்பாக ஐசிஎப் அதிகாரி களிடம் முதல்கட்ட ஆலோசனை நடத்தியுள்ளோம். தற்போது எங்களிடம் உள்ள தொழில்நுட்பத் துக்கு ஏற்றவாறு பெட்டிகளை தயாரிக்க முடியுமா? ரயில்கள் இயக்கம், சிக்னல் தொழில்நுட் பத்துக்கு ஏற்றதாக இருக்குமா? போன்றவை குறித்து பேச்சு வார்த்தை நடத்தினோம்.

இதேபோல், தொடர்ந்து 3 முறை ஆலோசனை கூட்டம் நடத்தப் படும். அதன்பின்னரே ரயில்வே வாரியத்திடம் அனுமதி பெற்று முடிவு செய்யப்படும்.’’ என்றனர்.

இது தொடர்பாக ஐசிஎப் அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘கொல்கத்தா மெட்ரோ ரயிலுக்கு தேவையான பெட்டிகளை இங்கிருந்து தயாரித்து வழங்கி வருகிறோம். இதற்கிடையே, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு தேவையான ரயில் பெட்டிகள் தயாரிப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். இத்திட்டம் செயல்படுத்தினால் மெட்ரோ ரயில் பெட்டிகளுக்காக தற்போது செலவிடும் தொகையில் சுமார் 30 சதவீதம் குறைக்க முடியும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்