காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு - திருப்போரூர் செல்லும் வழியில், செம்பாக்கம் வழியாக காயார் மற்றும் தையூர் செல்லும் கிராமச்சாலை அமைந்துள்ளது. இச்சாலையின் வழியாக இள்ளலூர், காட்டூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் கேளம்பாக்கம் மற்றும் செங்கல்பட்டு பகுதிக்கு சென்று வருகின்றனர். விவசாய பணிகளுக்கான வாகனங்களும், நெல் மற்றும் காய்கறி மூட்டைகளை கொண்டு செல்லும் வாகனங்களும் இந்த சாலையைப் பயன்படுத்துகின்றன.
இந்நிலையில், காட்டூர் கிராமப்பகுதியில் உள்ள 1 கிமீ நீள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
இதையடுத்து, காட்டூர் சாலையை சீரமைக்கக் கோரி வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். ஆனால், வன விலங்கு நடமாட்டம் உள்ளதால் சாலை சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வற்கான அனுமதி வழங்குவதில், சிக்கல் ஏற்பட்டுள்ள தாக வனத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, காயார் கிராமத்தினர் கூறியதாவது: காட்டூர் கிராமப்பகுதியின் சாலையை தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ள சாலைகள் நெடுஞ்சாலைத்துறை மூலம் சீரமைக்கப்பட்டுள்ளன. நடுவில் உள்ள காட்டூரில், மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, திருப்போரூர் வனச்சரகர் நரசிம்மனிடம் கேட்டபோது, ‘காட்டூர் கிராமத்தின் அருகில் மிகவும் அடர்ந்த வனப் பகுதி உள்ளது. இங்கு, தற்போது மான்கள் உட்பட பல்வேறு வன விலங்குகளின் நடமாட்டம் அதிக மாக உள்ளது. வன விலங்குகள் அவ்வப்போது சாலையை கடந்து செல்கின்றன. அப்போது, சாலை யில் வேகமாக செல்லும் வாகனங் களில் சிக்கி காயமடைகின்றன.
இதனை கருத்தில் கொள்ள வேண்டிய நிலை வனத்துறைக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சாலையை சீரமைப்பதற்கான அனுமதி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும், உயர் அதிகாரிகளின் ஆலோசனை பெற்று அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago