கோவை | நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் 7,064 குடியிருப்புகள் கட்டும் பணி தீவிரம்

By செய்திப்பிரிவு

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் சார்பில், கோவையில் மேட்டுப்பாளையம், வால்பாறை, பொள்ளாச்சி, செல்வபுரம், உக்கடம், காந்திபுரம், வெரைட்டிஹால் ரோடு, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் 26 திட்டப் பணிகள் மூலம் ரூ.616.15 கோடி மதிப்பீட்டில் 7,064 குடியிருப்புகள் கட்டப்படுகின்றன.

இதில், கோவைப்புதூர், திருவிக நகர், கல்லா மேடு, மெக்ரிக்கர் சாலை, பேரூர் வடக்கு, பிள்ளையார்புரம், டோபிகானா, சூலூர் பகுதி 3, ஐயுடிபி காலனி, பன்னீர்மடை கிழக்கு ஆகிய இடங்களில் 10 திட்டப் பணிகள் மூலம் ரூ.220.74 கோடி மதிப்பில் 2,561 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

மேலும், நேதாஜிபுரம், சித்தாபுதூர், பேரூர் வடக்கு பகுதி 1, பேரூர் தெற்கு பகுதி 1, எழில் நகர், வெரைட்டிஹால் சாலை, எம்ஜிஆர் நகர், வால்பாறை, உக்கடம் பகுதி 4, சிக்கதாசம்பாளையம், சுந்தரம் வீதி, மூங்கில் மடை குட்டை, சிஎம்சி காலனி 2, சித்தாபுதூர் 2, முல்லை நகர் ஆகிய இடங்களில் 16 திட்டப் பணிகள் மூலம் 4,503 குடியிருப்புகள் ரூ.395.41 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE