காவல் துறை அதிகாரிகள் மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகளைக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக கருணைராஜ் என்பவரின் மகள் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஒரு வழக்கு தொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு எனது குடும்பத்தினரை கோயம்புத்தூர் போலீஸார் அழைத்துச் சென்றனர். அப்போது கோயம்புத்தூர் செல்லும் வரை வழி நெடுகிலும் வாகனத்தில் எனக்கு ஏராளமான பாலியல் தொந்தரவுகளை போலீஸார் அளித்தனர். கோயம்புத்தூர் சென்ற பிறகும் இவ்வாறு பாலியல் துன்புறுத்தல் செய்த போலீஸ் அதிகாரிகள், என் தாயாரையும் இதேபோல் துன்புறுத்தினர்.
அவ்வாறு பாலியல் துன்புறுத்தல் அளித்த காவல் துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி சி.டி.செல்வம், மனுவை தள்ளுபடி செய்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.
உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக மனுதாரர் கூறியுள்ள கடுமையான குற்றச்சாட்டுகள் உண்மையில்லை என தெரிய வந்துள்ளதால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர் வழக்குச் செலவாக ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்தத் தொகையினை தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவிடம் வழங்கிட வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
15 hours ago