ஸ்ரீவில்லிபுத்தூர் | பிரசவத்தின்போது தாய், குழுந்தை உயிரிழந்த சம்பவம்: மருத்துவர், செவிலியர் பணியிட மாற்றம்

By செய்திப்பிரிவு

சிவகாசி: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிரசவத்தின்போது தாய் மற்றும் குழந்தை உயிரிழந்த சம்பவத்தில், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய மருத்துவர் மற்றும் செவிலியரை பணியிட மாற்றம் செய்து சுகாதாரத் துறை இணை இயக்குநர் கலுசிவலிங்கம் உத்தரவிட்டார்.

வத்திராயிருப்பு அருகே புதுப்பட்டியை சேர்ந்த ராம்குமார். இவரது மனைவி அரங்கநாயகி. இவர் கடந்த 17-ம் தேதி இரவு வ.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டார். 18-ம் தேதி காலை அவருக்கு பெண் குழந்தை இறந்து பிறந்தது. மேல்சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அரங்கநாயகி வழியிலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து துறை ரீதியிலான விசாணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், வ.புதுப்பட்டி மருத்துவர் தேவிகா என்பவர் எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், செவிலியர் உமாமகேஸ்வரி என்பவர் தாயில்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்து சுகாதாரத் துறை இணை இயக்குநர் கலுசிவலிங்கம் உத்தரவிட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்