தமிழ் வளர்ச்சிக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

By கி.மகாராஜன்

மதுரை: தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ் வளர்ச்சிக்குத் தேவையான தமிழ் புத்தகங்கள், தமிழ் ஆராய்ச்சி புத்தகங்கள், தமிழ் மொழி வளர்ச்சியுடன் தொடர்புடைய பிற மொழி புத்தகங்கள் ஆகியவற்றை மதுரை உலக தமிழ்ச் சங்க நூலகத்தில் வைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், நூலகத்திற்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர உத்தரவிட வேண்டும்." என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மதுரை உலகத் தமிழ்ச் சங்க இயக்குனர் நேரில் ஆஜராகி, "மதுரை உலகத் தமிழ்ச் சங்க நூலகத்தில் 26 ஆயிரத்து 35 புத்தகங்கள் உள்ளன. இங்கு நூலகம் அமைக்க ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் இவ்வழக்கில் நீதிபதிகள் மகாதேவன், சத்ய நாராயண பிரசாத் அமர்வு இன்று பிறப்பித்த உத்தரவில், "தமிழ் மொழியை வளர்க்க தமிழக அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும். சங்க கால தமிழ் இலக்கியங்களையும், நவீன கால தமிழ் இலக்கியங்களையும் பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை தமிழக அரசு முன்னெடுத்துச் செல்ல வேண்டும்" என குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்