ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடு: நாளை மறுநாள் அமைச்சர் ஆலோசனை

By செய்திப்பிரிவு

சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நாளை மறுநாள் ஆலோசனை நடைபெற உள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா அமைப்பு மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 7 நாட்களாக தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்நிலையில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடர்பாக நாளை மறுநாள் (டிச.22) கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனை நடைபெறவுள்ளது.சென்னை, நந்தனத்தில் உள்ள கால்நடைத்துறை அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துறை அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள், நெறிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE