எக்ஸ்னோரா முன்னாள் தலைவர் சுலோச்சனா ராமசேஷன் கனடாவில் காலமானார்: இன்று இறுதிச் சடங்கு

By செய்திப்பிரிவு

சென்னை: எக்ஸ்னோரா முன்னாள் தலைவர் சுலோச்சனா ராமசேஷன் (89) நேற்று மாலை கனடாவில் காலமானார். அவரது இறுதிச் சடங்குகனடாவில் இன்று நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை பகுதியில் தொண்டு மற்றும்கல்வி சேவையில் சிறந்து விளங்கிய புகழ்பெற்ற ராமசேஷ ஐயர்குடும்பத்தை சேர்ந்தவர் சுலோச்சனா ராமசேஷன். தனது கணவர் மறைவுக்குப் பிறகு, அவர் தனதுமகளுடன் கனடாவில் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக நேற்று மாலை உயிரிழந்தார். அவருக்கு பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரும், அவரது கணவர் ராமசேஷனும், தங்கள் வாழ்க்கையை ஏழைகளின் முன்னேற்றத்துக்காக, குறிப்பாக நரிக்குறவர்கள் நலனுக்காக அர்ப்பணித்தவர்கள். சுலோச்சனா தொடர்ந்து திருவான்மியூர், அடையார் பகுதிகளில் நரிக்குறவர் காலனிகளுக்கு சென்றுஅவர்களின் மறுவாழ்வுக்காக பாடுபட்டவர். குறிப்பாக, நரிக்குறவர்களை கழிப்பறைகளை பயன்படுத்த வைப்பது, கழிப்பறை கழிவுகளில் இருந்து சமையல் எரிவாயு தயாரித்து பயன்படுத்துவது, முடிவெட்டிக்கொள்வது, சுயமாக முகச்சவரம் செய்துகொள்வது,பற்பசை கொண்டு பல் துலக்குது போன்ற பழக்கங்களை அவர்களுக்கு ஏற்படுத்தினார். அவர் எக்ஸ்னோரா நிறுவனத்தில் முன்னாள் தலைவராக 25 ஆண்டுகள் பணியாற்றியவர்.

அவரது தங்கை இந்திய வானொலியில் புகழ்பெற்ற செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண்சுவாமி. அவரது அண்ணன் ராம், ஹாங்காங்கில் செயல்பட்டுவரும் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் என்ற செய்திநிறுவனத்தில் மூத்த ஆசிரியராக பணியாற்றியவர். மற்றொரு சகோதரர் லண்டனில் வழக்கறிஞராக இருந்தார். அவரது இரு மகள்களும் கனடாவில் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்