பரந்தூர் விமான நிலைய திட்டத்தை அரசு கைவிட பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்த வேண்டும்: முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் உள்ளிட்டோர் கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றமுன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன், முன்னாள் விமானி கேப்டன் மோகன் ரங்கநாதன், நடிகர் சித்தார்த், கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா, சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராமன் உள்ளிட்ட 30-க்கும்மேற்பட்ட பிரபலங்கள் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பரந்தூர் விமான நிலையம் அமைக்கக் கட்டுமானங்கள் ஏற்படுத்த இருக்கும் நிலம், அடையாற்றின் தென்மேற்கு நீர் பிடிப்புபகுதியின் 500 சதுர கிமீ பரப்புக்குள் அமைந்திருக்கிறது. இப்பகுதியிலிருந்து வரும் நீர், செம்பரம்பாக்கத்தில் இருந்து வெளியேறும் நீருடன் அடையாற்றில் சேருகிறது. அதனால்தான் கடந்த 2015-ம் ஆண்டு மணிமலங்கலம், பெருங்களத்தூர், தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் போன்ற பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இது தொடர்பாக இந்திய அறிவியல் நிறுவனம் (Indian Instituteof Science), பல்துறை இடையிலானநீர் ஆராய்ச்சி மையம் (Inter disciplinary Center for Water Research) ஆகியவை நடத்திய ஆய்வில், கடந்த 2015 வெள்ளத்தில் செம்பரம்பாக்கம் ஏரி மட்டுமல்லாது, மற்ற காரணங்களும் முக்கிய பங்காற்றின எனத் தெரிவித்துள்ளது.

மேலும், அன்று செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேறிய நீரின் அளவு விநாடிக்கு 800 கன மீட்டர். செம்பரம்பாக்கத்தின் தாக்கத்துக்கு ஆளாகாத மணிமங்கலம், பெருங்களத்தூர், தாம்பரம் போன்ற இணையான நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து விநாடிக்கு 3 ஆயிரம் கன மீட்டர் நீர்வெளியேறியது. 2-ம் சேர்ந்து அடையாறு வழியாக மாநகருக்குள் நுழையும்போது 3 ஆயிரத்து 800 கன மீட்டராக (1 லட்சத்து 34 ஆயிரம் கன அடி) இருந்தது.

அடையாற்றின் கொள்ளளவு விநாடிக்கு 2 ஆயிரத்து 28 கன மீட்டர் மட்டுமே என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள இடம் உள்ளடக்கிய பகுதியிலிருந்து 3 ஆயிரம் கன மீட்டர் நீர் அடையாற்றுக்கு வந்துள்ளது.

அடையாற்றின் கொள் திறனை அதிகரிக்க முடியாது. நீரியல் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள ஆற்றின் கரையில் 18 சதுர கிமீ பரப்பில், நீர் மண்ணுக்குள் ஊடுருவ முடியாத தளத்தை ஏற்படுத்துவது பேரிடரை கூவி அழைப்பதாகும். பரந்தூர் விமான நிலையத்துக்குத் திட்டமிடுபவர்கள், அதனால் சென்னைக்கு என்ன பாதிப்பு என்பதை யோசிக்க வேண்டும்.

எனவே, பரந்தூரில் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்