புதுக்கோட்டை: அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த 2 பெண்களில் ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மருத்துவமனை முன்பு நேற்று சாலை மறியல் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள அரசர்குளத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி மனைவி ஜோதிமீனா(26). இவருக்கு, அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் டிச.13-ம் தேதி அறுவைச் சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. பின்னர், சிறிது நேரத்திலேயே ஜோதிமீனா உயிரிழந்துவிட்டார்.
இதேபோன்று, கூத்தாடிவயலைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மனைவி ராஜலட்சுமி(26) என்பவருக்கு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் டிச.15-ல் ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து, அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டதால், கர்ப்பப்பை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அதன் பிறகும் ராஜலட்சுமிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், மருத்துவக் குழுவினரின் தவறான சிகிச்சை யால்தான் பிரசவித்த தாய்மார்களில் ஒருவர் இறந்துள்ளார். மற்றொருவர் உடல் நலக்குறைவுடன் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, சம்பந்தப்பட்ட மருத்துவக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ராஜலட்சுமி, ஜோதிமீனா ஆகியோரின் உறவினர்கள் அறந்தாங்கி மருத்துவமனை அருகே நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் மாவட்ட இணை இயக்குநர் (ஊரக நலப்பணிகள்) கே.ராமு, வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, மருத்துவர் சாரதா, செவிலியர் பரமேஸ்வரி, உதவியாளர் முத்துலட்சுமி ஆகியோர் இடமாற்றம் செய்யப்படுவர் என இணை இயக்குநர் ராமு உறுதி அளித்ததால், போராட்டம் கைவிடப்பட்டது. இந்தப் போராட்டத்தால் அறந்தாங்கி, பட்டுக்கோட்டை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. மருத்துவர், செவிலியர், உதவியாளர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்படுவர் என உறுதி அளிக்கப்பட்டதால், போராட்டம் கைவிடப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago