செவிலியர்கள் பற்றாக்குறை அதிகமுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் பட்டியலில் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதலிடத்தில் இருக்கிறது.
அரசு மருத்துவமனை பொது வார்டுகளில் 6 நோயாளிகளுக்கு ஒரு செவிலியரும், தீவிர சிகிச்சைப்பிரிவு வார்டுகளான ஐசியூ(ICU), ஐஎன்சியு( INCU), ஐஆர்சியு(IRCU), எம்ஐசியு (MICU), பிரசவ வார்டு, அறுவை சிகிச்சை வார்டுகளில் முறையே 1 நோயாளிக்கு ஒரு செவிலியரும், பச்சிளம் குழந்தைகள் வார்டில் 3 குழந்தைகளுக்கு ஒரு செவிலியரும் பணிபுரிய வேண்டும். ஆனால், 3 ஷிப்ட் இருக்கும் பெரும்பாலான தமிழக அரசு மருத்துவமனை பொது வார்டுகளில் செவிலியர்கள் வார விடுமுறை, இதர விடுமுறைகள் போக 60 முதல் 80 நோயாளிகளுக்கு 3 செவிலியர்கள் மட்டுமே ஒரு ஷிப்ட்டில் பணிபுரிகின்றனர்.
மதுரை, தஞ்சாவூர், கோவை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள் ளிட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் 3 அல்லது 4 செவிலியர்கள் மட்டுமே ஒரு ஷிப்டில் பணியில் உள்ளனர். இதில் மதுரை அரசு மருத்துவமனையில் பெரும்பாலான வார்டுகளில் 150 நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் மட்டுமே பணிபுரிகின்றனர். அதனால், பிரசவ வார்டுகளில் அறுவை சிகிச்சை முடிந்தபிறகு தாய்மார்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடியாத நிலை இருக்கிறது.
ஒரு செவிலியரே 50-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மருத்துவ கவனிப்புகள் பார்ப்பதால் சிகிச்சையில் தாமதம், உரிய நேரத்தில் முழுமையான மருத்துவ சேவை கிடைக்காமல் நோயாளிகள் மிகுந்த சிரமம் அடைந் துள்ளனர். அரசு மருத்துவ செவிலியர் கல்லூரி மாணவிகள் பணிபு ரிவதால், நோயாளிகள் பராமரிப்பு ஓரளவு சமாளிக்கப்படுகிறது.
இதுகுறித்து செவிலியர்கள் கூறி யதாவது: மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு ஆண்டிற்கு சராசரியாக 25 லட்சம் வெளி நோயாளி களும், 8 லட்சம் உள் நோயாளிகளும் வருகின்றனர். 22 ஆயிரம் கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக வருகி ன்றனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு இணையாக மதுரை அரசு மருத்துவமனைக்கு உள், வெளி நோயாளிகள் வருகின்றனர். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 760 நிரந்தர செவிலியர்கள் உள்ளனர். ஆனால், மதுரை அரசு மருத்துவமனையில் 340 நிரந்தர செவிலியர்களும், 70 மாற் றுப்பணி செவிலியர்களும் மட்டுமே பணிபுரிகின்றனர். அதே நேரத்தில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் 500 படுக்கைகளுக்கு 291 செவிலியர்கள் தேவைக்கேற்ப பணிபுரிகின்றனர். மதுரையை விட மூன்று மடங்கு நோயாளிகள் வருகை குறைவாக இருக்கும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 255 செவிலியர்கள் பணிபுரிகின்றனர்.
அதுபோல், ஆயிரம் படுக்கைகளுக்கு அதிகமாகவும், நாள் ஒன்றுக்கு ஆயிரம் உள் நோயாளிகள் சிகிச்சைப் பெறக்கூடிய தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, கோவை உள்ளிட்ட அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைகளில் முறையே வெறும் 162, 202, 254, 410, 230 என்ற எண்ணிக்கையிலான செவிலியர்கள்தான் பல ஆண்டுகளாக பணிபுரிகின்றனர்.
சிகிச்சை பெறவரும் நோயாளிகள் - செவிலியர்கள் விகிதாச்சாரத்தின்படி தமிழக அளவில் செவிலியர்கள் பற்றாக்குறை அதிகமுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை களில் மதுரை அரசு மருத்து வமனை முதலிடத்தில் இருக்கிறது. திருநெல்வேலி 2-வது இடத்திலும், தூத்துக்குடி 3-வது இடத்திலும், தஞ்சாவூர் 4-வது இடத்திலும், கோவை 5-வது இடத்திலும் உள்ளன என்றனர்.
இதுகுறித்து மருத்துவமனை உயர் அதிகாரியிடம் கேட்டபோது, தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருக்கிறது. இவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது, என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago