சசிகலாவின் குடும்பம் அடிப்படை யில் ஒரு திமுக குடும்பம். சசிகலா வுக்கும் நடராஜனுக்கும் நடை பெற்ற திருமணம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையேற்று நடத்தி வைத்ததுதான்.
அந்தளவுக்கு திமுக பின் புலம் கொண்ட சசிகலா, அதிமுக வின் பொதுச் செயலாளர் ஜெய லலிதாவுக்குத் தோழியாகி, அவரது அரசியல் மட்டுமின்றி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் உதவிகரமாக இருந்துள்ளார்.
நெருக்கடி ஏற்பட்டபோதெல் லாம் ஜெயலலிதாவின் உடன் இருந்தும், சில சமயங்களில் விலகியிருந்தும், இறுதி நாட்களில் உடனிருந்தும் பணியாற்றிய இவரது செயல்பாடுகள் மக்களின் கவனத்தைப் பெற்றது. ஜெயலலிதா என்று சொன்னாலே தோழி சசிகலா என்று உச்சரிக்கும் அளவுக்கு அவர்களிடையே நட்பு உருவானது.
அண்ணா மறைவுக்குப் பிறகு
அண்ணா மறைவுக்குப் பின்னர் நடைபெற்ற கருணாநிதி தலைமையி லான திமுக ஆட்சிக் காலத்தில் 1970-71ம் ஆண்டுகளில் 59 பேர் மக்கள் தொடர்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர்தான் ம.நடராஜன்.
கொள்கை பரப்புச் செயலாளர்
ஜெயலலிதாவை தீவிர அரசி யலில் ஈடுபடுத்த திட்டமிட்ட எம்ஜிஆர் 1983-ல் ஜெயலலிதாவை கொள்கைப் பரப்புச் செயலாள ராக்கினார். சத்துணவு வாரிய உயர்மட்ட குழு உறுப்பினர் பதவியை வழங்கினார். அத்துடன் கடலூர் மாவட்ட ஆட்சியராக பணி யாற்றிய சந்திரலேகாவை ஜெயலலி தாவுக்கு ஆலோசனை வழங் கவும், அரசியல் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது கடைபிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் குறித்து பயிற்சி யளிக்கவும் நியமித்தார்.
ஜெயலலிதாவுக்கு சந்திரலேகா உற்ற துணையாக இருந்தார். இதே சூழ்நிலையில் சந்திரலேகா பணி யாற்றிய கடலூர் மாவட்டத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணி யாற்றிய ம.நடராஜன், சந்திர லேகாவின் நம்பிக்கைக்குரிய வரானார். (அப்போது ஆழ்வார் பேட்டையில் பீமன் நகரில் உள்ள வீட்டில் நடராஜனின் மனைவி சசிகலாவும் அவரது தம்பி திவா கரனும் சேர்ந்து வீடியோ கேசட் வாடகைக்கு விடும் கடை ஒன்றைத் தொடங்கினர். இந்தத் தகவலை நடராஜன், மாவட்ட ஆட்சியர் சந்திரலேகாவுக்கு தெரியப்படுத்தி வைத்திருந்தார்.
சசிகலாவின் கடையிலிருந்து…
இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமைகளிலும், தன்னுடைய ஓய்வு நேரங்களிலும் சந்திரலேகா முழு மையாக ஜெயலலிதாவின் வீட்டி லேயே தங்கியிருப்பார். அப்போது, இருவரும் ஆங்கிலத் திரைப்படங் களைப் பார்ப்பது வழக்கம். அவற்றை நடராஜன், தன் மனைவி சசிகலா நடத்தி வந்த கடையிலிருந்து எடுத்துச்சென்று கொடுப்பார்.
அந்த ஆங்கிலத் திரைப்படங்கள் அனைத்தும் நல்ல தரமான பிரின்ட்க ளாகவும், புதுப் புது ஹாலிவுட் படங்களாகவும் இருப்பது குறித்து வியப்பு தெரிவித்த ஜெயலலிதா, சந்திரலேகாவிடம் உங்களுக்கு எப்படி இந்த படங்கள் கிடைக்கிறது என்று கேட்டுள்ளார். அப்போது, தனக்குக் கீழ் பணியாற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி ம.நடராஜனின் மனைவி வீடியோ கேசட் வாடகை கடை நடத்தி வருவது குறித்து ஜெயலலிதாவிடம் சந்திரலேகா தெரிவித்தார். அதன்மூலம் தொடர்ந்து சசிகலாவே நேரடியாக ஜெயலலிதாவிடம் வீடியோ கேசட்டு களை எடுத்துச் சென்று கொடுக்கும் அளவுக்கு நட்பு வளர்ந்தது.
இதனிடையே, ‘நமது கழகம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி பிரிந்து சென்ற முன்னாள் அமைச்சர்கள் எஸ்டிஎஸ், அழகு திருநாவுக்கரசு, மன்னை ஞானசேகரன் மற்றும் பலர் எம்ஜிஆருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டவுடன் மீண்டும் அதிமுக வில் இணைந்தனர். அந்த இணைப் புக்குப் பின்னர் தங்களை அரசியல் ரீதியாக தஞ்சை மண்டலத்தில் பலப் படுத்திக்கொள்ள திட்டமிட்டு மன் னார்குடியில் ஜெயலலிதாவை வைத்து பொதுக்கூட்டம் நடத்த லாம் என முடிவு செய்தனர். அதற்கு எம்ஜிஆரிடமும் ஒப்புதல் பெற்றனர். சசிகலாவின் உதவியுடன் ஜெய லலிதாவிடம் தேதி கேட்டனர். அதுவரை, எந்தவொரு அரசியல் விவகாரங்களிலும் தலையிடாத சசிகலா, முதன்முறையாக தனது சொந்த ஊரான மன்னார்குடியில் பொதுக்கூட்டத்துக்கு ஜெயலலிதா விடம் கேட்டு தேதி பெற்றுத் தந்தார்.
சசிகலாவுக்கு பாராட்டு!
‘நமது கழக’த்தில் இருந்து பிரிந்து வந்த தலைவர்கள் தங்களது செல்வாக்கை நிரூபிப்பதற்காக பெருமளவில் கூட்டத்தைத் திரட்டி னர். மன்னார்குடி அரசியல் பொதுக் கூட்ட வரலாற்றில் இது போன்ற ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றதில்லை என்ற அளவுக்கு வரவேற்பு வளை வுகள், மின்னொளி அலங்காரம் என ஏற்பாடு செய்து அமர்க்களப் படுத்திவிட்டனர். இதைப் பார்த்து பிரமித்த ஜெயலலிதா, சசிகலாவை வெகுவாகப் பாராட்டினார்.
‘நமது கழகம்’ கட்சித் தலை வர்களின் அரசியல் ஏற்றத்துக்கு இந்தப் பொதுக்கூட்டம் உதவிய தாகத் தெரியவில்லை. மாறாக, ஜெயலலிதா- சசிகலாவின் நட்புக்கு இந்தப் பொதுக்கூட்டம் நல்ல அடித்தளமிட்டுத் தந்தது.
ஜெயலலிதாவின் வீட்டிலேயே...
இதற்குப் பின்னர்தான் ஜெய லலிதாவின் வீட்டிலேயே சசிகலா தங்கத் தொடங்கினார். இவரது நெருக்கத்துக்குப் பிறகு, ஜெய லலிதாவுடனான சந்திரலேகாவின் தொடர்பு குறைந்துவிட்டது.
இந்த நிலையில் 1987-ம் ஆண்டு எம்ஜிஆர் மறைந்தார். அந்த துக்க நிகழ்வில் ஜெயலலிதாவுக்கு உற்ற துணையாக நின்று, பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் எம்ஜிஆரின் துக்கத்தில் அவரது தலைமாட்டுக்கு அருகே கொண்டு சென்று ஜெயலலிதாவை நிறுத்தி வைத்ததுடன், அவருக்குப் பாது காப்பாக ஆட்களையும் நிற்க வைத்து உதவிபுரிந்தவர் சசிகலா.
எம்ஜிஆர் மறைந்த பின்…
தொடர்ந்து, எம்ஜிஆரின் மறை வுக்குப் பின்னால் ஜெயலலிதாவின் அரசியல் பணியில் ஆர்.எம்.வீரப்பனை எதிர்த்து, அதிமுக தலைமையைக் கைப்பற்ற திரு நாவுக்கரசர், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.போன்ற தலைவர்கள் அரசியல்ரீதியாக உறுதுணையாக இருந்தனர். அப்போது தனிப்பட்ட முறையில் சசிகலாவும் உதவியாக இருந்தார். அழகு திருநாவுக்கரசு, மன்னை ஞானசேகரன் மற்றும் தன் குடும்பத்தினரின் உதவி யுடன் ஆட்களை நியமித்து ஜெய லலிதாவை தொடர்ச்சியாக பாது காத்தவர் சசிகலா.
28 ஆண்டுகளாக…
1988-ம் ஆண்டுக்குப் பிறகு முழுமையாக ஜெயலலிதாவுடன் குடியேறிய சசிகலா, அதன் பின்னர் தன் கணவர் நடராஜனை ஒரு சில பொது நிகழ்ச்சிகளில் தவிர வேறு எங்கும் சந்தித்துக் கொண்டதில்லை. ஜெயலலிதாவுடனேயே 28 ஆண்டு களாக உள்ளார். அவ்வப்போது சசிகலாவை பிரிந்துவிட்டதாகவும், கட்சியை விட்டு நீக்கி வைத்துள்ள தாகவும் ஜெயலலிதா அறிவித் தாலும் இறுதியில் ஜெயலலிதா- சசிகலாவின் நட்பே நிலைத்துள்ளது.
இந்த 28 ஆண்டுகளில் சசிகலா குடும்பத்தினரின் அசுரவேக வளர்ச்சிதான் ஜெயலலிதாவின் மீதான விமர்சனத்துக்கும் அடிப் படையாக அமைந்துள்ளது. என்றாலும் கடந்த 74 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதாவைப் பராமரித் துப் பாதுகாத்த சசிகலாவின் பணி ஜெயலலிதாவின் அரசியல் வரலாற்றில் அழிக்க முடியாத நட்பு என்றாகிவிட்டது.
திருத்துறைப்பூண்டி விவே கானந்தன்- கிருஷ்ணவேணி தம்ப திக்கு 6 குழந்தைகள். இதில், 5-வது மகளாகப் பிறந்தவர் சசிகலா. சசிகலாவின் உடன் பிறந்தவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் விவரம்:
1. மூத்த சகோதரி வனிதாமணி- மகன்கள் டிடிவி தினகரன், வளர்ப்பு மகன் சுதாகரன், பாஸ்கரன்.
2. மூத்த சகோதரர் சுந்தரவதனம் (வங்கி அதிகாரி)- மகன் டாக்டர் வெங்கடேசன், மகள் அனுராதா- ஜெயா டி.வி இயக்குநர் (தினகரனின் மனைவி).
3. வினோதகன்- இவரது மகன்கள் தஞ்சையில் உள்ள மகாதேவன், தங்கமணி.
4. ஜெயராமன்- இவரது மனைவி தான் ஜெயலலிதாவுடன் வசிக்கும் இளவரசி (ஹைதரா பாத்தில் ஜெயலலிதா கட்டிய பங்களாவை பார்வையிட சென்றபோது மின்சார விபத்தில் ஜெயராமன் உயிரிழந்ததால் இளவரசியை தன்னுடனேயே வைத்துக்கொண்டார் ஜெய லலிதா. இந்த இளவரசியின் மகன்தான் விவேக்).
5. சசிகலா- ம.நடராஜன்.
6. தம்பி- திவாகரன்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago