சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல், வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, தேர்தல் பணிகளை பல்வேறு அரசியல் கட்சிகள் தற்போதே தொடங்கி விட்டன.
அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமையும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே கடந்த மாதம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன், கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக கடந்த 4-ம் தேதி கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்திலும் மநீம தலைவர் கமல்ஹாசன் பங்கேற்று, பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.
இந்நிலையில் இன்று முக்கிய நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
தவறாமல் பங்கேற்க வேண்டும்: சென்னை, அண்ணாநகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத் தில், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என மக்கள் நீதி மய்யம் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago