தமிழக தோட்டக்கலையில் 50 சதவீதம் காலிப் பணியிடங்கள்: மத்திய அரசுக்கு திரும்பிச் செல்லும் ரூ.300 கோடி நிதி

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

தமிழக தோட்டக்கலைத் துறையில் 50 சதவீதம் காலிப்பணியிடங்கள் இருப்பதால், திட்டங்கள் விவசாயிகளைச் சென்றடையாமல் ஆண்டு தோறும் ரூ.200 கோடி முதல் ரூ.300 கோடி வரையிலான நிதி மத்திய அரசுக்கே திரும்பிச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

காய்கறிகள், பழங்கள், மருத்துவப் பயிர்கள், அலங்காரச் செடிகள், மலர்கள் உள்ளிட்டவை முக்கிய தோட்டக்கலைப் பயிர்கள் ஆகும். இவற்றுக்கு தேவையான புதிய தொழில்நுட்ப வசதிகள், தகவல்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பது, மகசூலை அதிகரித்து விவசாயிகளின் வரு வாயை இரட்டிப்பாக்குவது உள் ளிட்ட மேம்பாட்டுப் பணிகளைத் தோட்டக்கலைத் துறை மேற்கொள்கிறது.

வேளாண் பயிர்களுடன் ஒப்பிடும் போது தோட்டக்கலை பயிர்கள் விவசாயிகளுக்கு அதிக வருவாய் தரக்கூடியவை. அதனாலேயே 1979-ம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சியில் தோட்டக்கலைப் பயிர்களுக்கென தனித்துறை உருவாக்கப்பட்டது. இத்துறை தொடங்கியபோது, வெறும் 7 லட்சம் ஹெக்டேரில் மட்டுமே தோட்டக்கலைப் பயிர்கள் பயிரிடப்பட்டன.

தற்போது அது 12 லட்சம் ஹெக்டேராக உயர்ந் துள்ளது. மலர்கள் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது. பழங்கள், காய்கறிகள் உற்பத்தியில் 2-ம் இடம் வகிக்கிறது. ஆனால், தோட்டக்கலைத் துறையில் நீடிக்கும் 50 சதவீதம் காலிப்பணியிடங்களால், அந்த துறையின் வளர்ச்சி மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் விவசாயிகளைச் சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, தோட்டக்கலைத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மகாராஷ்டிரா, இமாசலப்பிரதேசம், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தோட்டக்கலைத் துறைக்கென தனி அமைச்சர் நியமிக்கப்படுகின்றனர். ஆனால், தமிழகத்தில் தனி துறையாக இருந்தாலும் தனி அமைச்சகம் இல்லை. போதுமான அலுவலர்களும் இல்லை.

அதனால் தோட்டக்கலைத் துறையின் புதிய திட்டங்கள், தொழில்நுட்பங்கள் விவசாயி களைச் சென்றடையாமல், அவர்கள் வாழ்க்கைத்தரம் மற்றும் வரு வாயில் முன்னேற்றம் ஏற்படாத நிலை இருந்தது.இதையடுத்து, 2007-08-ல் தோட்டக்கலைத் துறை மறு சீரமைப்பு செய்யப்பட்டு புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டன.

ஆனால், பணியிடங்களை உரு வாக்கியதோடு சரி, தற்போது வரை அந்த பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படவில்லை. தோட்டக்கலைத் துறையில் 2 கூடுதல் இயக்குநர்கள், 6 இணை இயக்குநர்கள், 39 துணை இயக்குநர்கள், 401 உதவி இயக்கு நர்கள், 523 தோட்டக்கலை அலு வலர்கள், 1,602 உதவி தோட்டக் கலை அலுவலர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால், 12 துணை இயக்குநர்கள், 250 உதவி இயக்குநர்கள், 70 தோட்டக்கலை அலுவலர்கள், 850 உதவி தோட்டக்கலை அலுவலர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.

உதவி தோட்டக்கலை அலுவலர் கள்தான், விவசாயிகளிடம் நேரடித் தொடர்பில் இருப்பவர்கள். அவர்களிலேயே 750 பணியிடங்கள் காலியாக இருப்பதால் மத்திய, மாநில அரசுகளின் புதிய திட்டங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பதில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய தோட்டக் கலைத் திட்டம், சொட்டு நீர் பாசனத் திட்டம், பெரு நகர தோட்டக் கலை அபிவிருத்தி திட்டம், ஒருங் கிணைந்த தோட்டக்கலை அபி விருத்தி திட்டம், மூலிகைப் பயிர் அபிவிருத்தித் திட்டம் போன்றவற் றின் மூலம் தமிழகத்துக்கு மத்திய அரசு, ரூ.500 முதல் ரூ.600 கோடி நிதி வழங்க தயாராக இருக்கிறது.

ஆனால், தோட்டக்கலைத் துறையில் 50 சதவீதம் காலி பணியிடம் நீடிக்கும் நிலையில் இந்த நிதியில் பாதிக்கும் குறைவாக ரூ.200 கோடி முதல் ரூ.300 கோடி வரை மட்டுமே பெற முடிகிறது. மற்ற நிதி மீண்டும் மத்திய அரசுக்கே திரும்பிச் செல்கிறது. அதனால், 100 விவசாயிகள் முன்னேற வேண்டிய இடத்தில் 50 விவசாயிகள் மட்டுமே முன்னேற முடிகிறது என்று அவர் கூறினார்.

வேளாண்-தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மோதல்

தோட்டக்கலைத் துறையில் பணிபுரிவதற்கென்றே, பிஎஸ்சி இளங்கலை தோட்டக்கலை அறிவியல் படிப்பு உருவாக்கப்பட்டது. இந்த படிப்புப் படித்தவர்களை, தோட்டக்கலைத் துறையில் பணிபுரிய நியமிக்கவும் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அது முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. பிஎஸ்சி வேளாண் படிப்புப் படித்தவர்களும், தோட்டக்கலைத் துறையில் நியமிக்கப்பட்டதால் தற்போது பதவி உயர்வில் வேளாண் மற்றும் தோட்டக்கலை படித்தவர்களிடையே மோதல் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இரு தரப்பினரும் மாறிமாறி நீதிமன்றம் சென்று பதவி உயர்வுகளில் தடையாணை வாங்குவதால் தோட்டக்கலைத் துறையில் கீழ்நிலை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கனவாக இருக்கிறது. ஒரே துறையில் பணிபுரியும் இந்த அதிகாரிகளிடையே நீடிக்கும் இந்த பூசல் தோட்டக்கலைத் துறையின் முன்னேற்றத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்