ஐயப்ப பக்தர்களுக்காக தேனி மாவட்டத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அன்னதான முகாம்கள்

By என்.கணேஷ்ராஜ்

சின்னமனூர்: ஐயப்ப பக்தர்களுக்காக தேனி மாவட்டம் சபரிமலை வழித்தடத்தின் வழிநெடுகிலும் 24 மணிநேர அன்னதான முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு உணவு மட்டுமன்றி மருத்துவம், ஓய்விடம், வாகன பழுது நீக்கம் போன்ற சேவைகளும் அளிக்கப்படுகின்றன.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கான முக்கிய வழித்தடமாக தேனி மாவட்டம் உள்ளது. தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தேனி, குமுளி, முண்டக்காயம், எரிமேலி, பம்பை வழியாக சபரிமலை சென்று வருகின்றனர்.

தற்போது மண்டல பூஜைக்காக வெளிமாநில பக்தர்களின் அதிகமாக வருகின்றனர். பலரும் வாகனங்களில் சென்று வந்தாலும், ஏராளமானோர் பாதயாத்திரையாகவும் சபரிமலைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். இவர்களுக்காக தேனி மாவட்டம், கம்பம் சாலையின் வழிநெடுகிலும் சேவை மற்றும் ஆன்மிக அமைப்புகள் சார்பில் ஏராளமான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேனி பழனிசெட்டிபட்டி அருகே ஐயப்ப பக்தர்கள், மாவட்ட சிவசேனா சார்பில் 8-ம் ஆண்டு சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து முகாம் பொறுப்பாளர் நாகராஜன் கூறுகையில், பலரும் வெயில், பனி பாராமல் ஐயப்பன் கோயிலுக்கு நடந்து செல்கின்றனர். இவர்களுக்காக நள்ளிரவானாலும் உடனடியாக உப்புமா, சேவை போன்ற உணவை தயாரித்து இலவசமாக வழங்குகிறோம் என்றார்.

வீரபாண்டி கருப்பசாமி கோயில் அருகே உள்ள முகாம் பொறுப்பாளர் எம்.மணி கூறுகையில், விரதம் இருந்து உணவை சுத்தமாக தயாரிப்பதால், ஒவ்வொரு ஆண்டும் எங்கள் முகாமுக்கு அதிக பக்தர்கள் வருகின்றனர். வாகன பழுதுநீக்கத்துக்கும், ஓய்வெடுத்து செல்லவும் வசதி செய்துள்ளோம் என்றார்.

இதே போல் வீரபாண்டி சரஸ்வதி மஹாலில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், பெரியகுளம் புறவழிச்சாலை பாண்டீஸ்வரர் கோயிலில் ஐயப்ப சேவா சமிதி மற்றும் சின்னமனூர், உத்தமபாளையம்,கம்பம், கூடலூர் என வழிநெடுகிலும் உணவு வழங்கும் முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.

ஆந்திரா மாநிலம், காக்கிநாடா மாவட்டம் சேங்ரோல் கிராமத்தைச் சேர்ந்த கங்கா சச்சின் நாராயண் என்ற பக்தர் கூறியதாவது: கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பாத யாத்திரையாக ஐயப்பன் கோயிலுக்கு செல்ல பயணம் மேற்கொண்டுள்ளோம். தேனி மாவட்ட மக்கள் சிறப்பாக வரவேற்பு அளித்தனர். இலவசமாக தரமான உணவு, ஓய்விடம், மருத்துவம், அளித்து அன்போடு கவனித்துக் கொண்டனர் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்