திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் நான்கு மண்டலங்கள் பிரிக்கப்பட்டு தலைவர்கள் நியமிக்கப்பட்டும் அலுவலகம் உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் செயல்பாடின்றி உள்ளனர். இதேபோல் சுகாதாரக் குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களும் எந்த வித நடவடிக்கையிலும் இதுவரை ஈடுபடவில்லை.
திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. 12 வார்டுகளுக்கு ஒரு மண்டலம் என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு அந்தந்தப் பகுதி கவுன்சிலர்கள் ஒருவர் மண்டல தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மண்டலத் தலைவர்களுக்கு அவர்களுக்குட்பட்ட வார்டு பகுதியில் அலுவலகங்கள் அமைத்துத் தரப்படவில்லை.
சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு மண்டல வாரியாக துணை ஆணையர்கள் பணியிடத்தை உருவாக்கியது. ஜனவரியில் இந்த பணியிடங்களுக்கான அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர். மண்டலத் தலைவர்கள், துணை ஆணையர்களுக்கான அந்தந்த மண்டலப் பகுதிகளில் அலுவலகங்கள் அமைக்க இதுவரை மாநகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டிடங்கள் இருந்தும், அவற்றை மண்டல அலுவலகங்களாக மாற்ற எந்த முயற்சியும் மாநகராட்சி அதிகாரிகள் எடுக்கவில்லை. இதனால் மண்டலத் தலைவர்கள் தங்கள் பதவிக்கான செயல்பாடுகள் இல்லாமல் உள்ளனர்.
» மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று ஆலோசனை
» தமிழகம் நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி - டிச.20, 21-ல் கனமழைக்கு வாய்ப்பு
இதேபோல் கடந்த பத்து மாதங்களுக்கு முன் திண்டுக்கல் மாநகராட்சியில் சுகாதாரத்துக்குழு, நகரமைப்புக் குழு, வரி விதிப்பு மற்றும் மேல்முறையீட்டுக் குழு, கணக்குக் குழு, கல்விக் குழு, பணிகள் குழு என ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டன. இதற்கு கவுன்சிலர்களில் ஒருவரை தலைவராகவும், பிற கவுன்சிலர்களை உறுப்பினர்களாகவும் தேர்வு செய்தனர்.
இந்தக் குழு இதுவரை ஒருமுறைகூட கூடி தங்கள் துறை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. குழுவின் பணிகள் என்ன என்பது கூட குழுவின் தலைவர், உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை. இதனால் பெயரளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்படாமல் உள்ளன.
இந்த நிலை தொடராமல் மண்டலத் தலைவர்கள், பல்வேறு குழுத் தலைவர்களைச் செயல்படவைத்து மாநகராட்சி நிர்வாகத்தைச் செம்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டுக்கல் மாநகராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago