திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெறவுள்ள வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய விழாவான சொர்க்க வாசல் திறப்பையொட்டி ஜன.2-ம் தேதி திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆட்சியர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளது: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா, இந்த ஆண்டு டிச.22-ம்தேதி தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு ஜன.2-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, திருச்சி மாவட்டத்துக்கு ஜன.2-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறை திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். எனினும், பள்ளி, கல்லூரிகளில் தேர்வு நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது. அனைத்து துணை கருவூலங்கள், மாவட்ட கருவூலம் ஆகியவை குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்டு இயங்கும். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜன.7-ம் தேதி (சனிக்கிழமை) வேலைநாளாகக் கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago