கோமாரி நோயால் கால்நடைகள் பாதிப்பு: 90 லட்சம் தடுப்பூசிகளை விரைந்து வழங்க மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: “தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 90 லட்சம் கோமரி நோய் தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டும்” என்று மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 90 லட்சம் கோமரி நோய் தடுப்பூசியை விரைந்து வழங்க வலியுறுத்தி மத்திய கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், "தமிழ்நாட்டிற்கு தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ் (கோமாரி நோய் மற்றும் கன்றுவீச்சு நோய் - National Animal Disease Control Programme - NADCP) கடந்த செப்டம்பர் 2022-ல் வழங்கவேண்டிய தடுப்பூசி மத்திய அரசால் இதுநாள் வரையில் வழங்கப்படாத சூழ்நிலையில், தமிழ்நாட்டில் கோமாரி நோயினால் கால்நடைகள் பாதிக்கப்படுவதைத் தடுத்திடவும், அவற்றின் நோய் எதிர்ப்புச் சக்தியினைப் பராமரித்திடவும், இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பைத் தடுத்திடவும், தமிழ்நாடு அரசு கோரியுள்ள 90 லட்சம் தடுப்பூசியினை விரைந்து வழங்கிட வேண்டும்" என்று அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE