கோவை: தாய்லாந்தின் பாங்காக் நகரில் சர்வதேச ‘பாரா பவுலிங் சாம்பியன்ஷிப்’ போட்டிகள் நவம்பர் 28-ம் தேதி தொடங்கி டிசம்பர் 3-ம் தேதி வரை நடைபெற்றன. மொத்தம் 16 நாடுகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்ற இப்போட்டிகளில் கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல அலுவலக ஊழியர் கன்னியப்பன் ஆறுமுகம் பங்கேற்றார்.
இதுகுறித்து கன்னியப்பன் ஆறுமுகம் கூறும்போது, “பாங்காக்கில் நடந்த போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தனிநபர் மற்றும் இரட்டையர்கள் பிரிவில் தடகளம், பாராபவுலிங் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றேன். இப்போட்டிகளில் 13-ம் இடம் பிடித்தேன்.
எதிர்வரும் காலங்களில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று மேலும் சாதனை படைக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்வேன். இதற்காக சென்னை, பெங்களூரு நகரங்களில் சிறப்பு பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளேன்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago