சென்னை: ஆதிதிராவிடர் பள்ளிகளுக்கு மேஜையுடன் கூடிய இருக்கைகள், இரும்பு அலமாரிகள் வாங்க ரூ.8.38 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத் துறை செயலர் தென்காசி ஜவஹர் வெளியிட்ட அரசாணை: ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கும் 305 பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வகையில், அந்த பள்ளிகளுக்கு மேஜைகளுடன் கூடிய இருக்கைகள், தேவையான இரும்பு அலமாரிகள் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி, 305 ஆதிதிராவிடர் பள்ளிகளுக்கு ரூ.8.10 கோடி மதிப்பீட்டில் 8,060 மேஜைகளுடன் கூடிய இருக்கைகளும், ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் தலா ஒன்று என 305 இரும்பு அலமாரிகளும் வாங்க மொத்தம் ரூ.8.45 கோடி நிதி வழங்க வேண்டும் என்று அரசுக்கு ஆதிதிராவிடர் நல ஆணையர் கோரிக்கை விடுத்திருந்தார். இதை பரிசீலித்த அரசு, ரூ.8.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தொடர் செலவினம் மேற்கொள்ள அனுமதி வழங்கி ஆணையிடுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago