மதுராந்தகம் மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு: 4 மருத்துவர்கள் மீது நடவடிக்கைக்கு உத்தரவு 

By செய்திப்பிரிவு

சென்னை: மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்ட போது எவ்வித முன் அறிவிப்பும் இன்றி விடுப்பு எடுத்த 4 மருத்துவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (டிச.15) செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார்வையிட்டு அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைமுறைகளை கேட்டறிந்தார். மேலும், சித்தா பிரிவு, அறுவைச் சிகிச்சை அரங்கம், பிரசவத்திற்கு பிந்தைய வார்டு, ஆய்வகம் போன்ற அனைத்து பிரிவுகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், இந்த ஆய்வின்போது எவ்வித முன்அறிவிப்பும் இன்றி விடுப்பு எடுத்த 4 மருத்துவர்கள் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை (17b) எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், இதைக் கண்காணிக்காத செங்கல்பட்டு, நலப்பணிகள் இணை இயக்குநரை வேறு மாவட்டத்திற்கு பணியிடமாறுதல் செய்யுமாறு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநருக்கு உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்