பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் 7-வது வந்தே பாரத் ரயில் பணி தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஐசிஎஃப்-ல் 7-வது வந்தேபாரத் ரயில் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டுபிப்ரவரிக்குள் இதைத் தயாரித்து,வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் ரூ.97 கோடியில் வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டு, டெல்லி-வாரணாசி, டெல்லி-காத்ரா இடையே இயக்கப்படுகின்றன. இதுபோல, அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் 4 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டன. இவற்றில், 5-வது வந்தேபாரத் ரயில், தென்னிந்தியாவில் மைசூர்-சென்னை இடையேவும், 6-வது வந்தே பாரத் ரயில் பிலாஸ்பூர்-நாக்பூர் இடையேவும் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், ஐசிஎஃப்-ல்7-வது வந்தே பாரத் ரயில் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. இதுகுறித்து ஐசிஎஃப் அதிகாரிகள் கூறியதாவது: 7-வது வந்தே பாரத் ரயில் தயாரிக்கும் பணியைத் தொடங்கி உள்ளோம். இந்த ரயிலிலும் அதிநவீனதொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படும். பிப்ரவரி மாதத்துக்குள் தயாரித்து வழங்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த ரயிலை, தென் மத்தியரயில்வேயில் விசாகப்பட்டினம்-செகந்திராபாத் இடையே இயக்கரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். அடுத்த ஆண்டுக்குள் 75 வந்தே பாரத் ரயில்களைத் தயாரித்துஇயக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்