சென்னை: அரபிக்கடல் பகுதியில் கேரளா, கர்நாடகாவை ஒட்டி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதுகுறித்து சென்னையில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரபிக்கடல் பகுதியில் கேரளா,கர்நாடகாவை ஒட்டி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, 14-ம் தேதி (இன்று) முதல் 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: லட்சத்தீவு பகுதிகள், கேரள, கர்நாடக கடலோரப் பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 14-ம் தேதி (இன்று) மணிக்கு 40-55 கி.மீ. வேகத்திலும், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். 15, 16-ம் தேதிகளில் மத்திய கிழக்கு அரபிக்கடல், அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 45-65 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
» அரசு கேபிள் டிவியில் விரைவில் ஓடிடி செயலி - முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆலோசனை
» ரூ.12.26 கோடியில் சேலத்தில் அதிநவீன ஐஸ்கிரீம் தொழிற்சாலை - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
முக்கிய செய்திகள்
தமிழகம்
42 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
7 hours ago