சுவாமி சிலைகளுக்கு மட்டும் வஸ்திரங்களை வடிவமைக்கும் கலைஞர்: பழநியில் இருந்து கடல் கடந்து செல்லும் கைவண்ணம்

தமிழகம் மட்டுமல்லாது வெளி நாடுகளில் உள்ள கோயில்களில் சுவாமிகளின் சிலைகளுக்கு வித விதமான வஸ்திரங்களை வடி வமைத்துத் தருவது, தேர்களுக் குத் தேவையான வேலைப்பாடுக ளுடன் கூடிய துணிகள், சுவாமி ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப் படும் குடை, தோரணங்கள் உள் ளிட்டவற்றை வடிவமைத்துத் தரு கிறார் பழநியைச் சேர்ந்த தையல் கலைஞர் ஒருவர்.

ஐந்து தலைமுறையாக...

திண்டுக்கல் மாவட்டம், பழநி அடிவாரம் பகுதி திருஆவினன்குடி கோயில் அருகே தையல் கடை வைத்துள்ளவர் எஸ்.முனுசாமி. இவரது பிரதான பணி, கோயில் களில் சுவாமி சிலைகளுக்கு ஏற்ப விதவிதமான வஸ்திரங்களை வடி வமைத்துத் தருவது. கடந்த ஐந்து தலைமுறையாக இவரது குடும்பத்தினர், இந்தத் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.

பழநி தண்டாயுதபாணி சுவாமி ராஜ அலங்காரத்துக்கு அணிவிக் கப்படும் வஸ்திரங்கள் இவரது கைவண்ணத்தில் உருவானவை. சிலைகளின் அளவை கொடுத்து விட்டால் போதும். அதற்கேற்ப வெவ்வேறு வண்ணங்களில் வஸ் திரங்களை அற்புதமாக வடி வமைத்து தந்துவிடுகிறார். ராஜ அலங்கார தலைப்பாகைகளை பல வண்ணங்களில் தயாரிக்கிறார். தேரோட்டத்தின்போது தேரில் பயன்படுத்தப்படும் கலை அம்சத் துடன் கூடிய துணிகளும் இவரது கை வண்ணத்தில் உருவாகின்றன. தற்போது மலேசியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடை பெறும் தைப்பூச விழாவுக்குத் தேவையான வஸ்திரங்களை தயாரித்துக்கொண்டு இருக் கிறார்.

ராஜ அலங்கார தலைப்பாகை.

இதுகுறித்து எஸ்.முனுசாமி கூறியதாவது: சுவாமி சிலைகளுக்கு உரிய வஸ்திரங்களை தயாரிக்கும் கலையை, எனது தாத்தாவிடம்தான் கற்றேன். பழநி தண்டாயுதபாணி சுவாமி ராஜ அலங்காரத்தில் அணிந்துள்ள வஸ்திரங்களை நான்தான் உருவாக்கினேன்.

இதைக் கேள்விப்பட்டு வெளி நாடுகளில் உள்ள தமிழர்கள் அங்கு அவர்கள் அமைத்துள்ள கோயில்களில் உள்ள சுவாமி சிலைகளுக்கும் ஆடைகளை வடிவமைத்து தரும்படி கேட்டுக் கொண்டனர். சிங்கப்பூர், மலேசி யாவில் இருந்து அதிக ஆர்டர்கள் வருகின்றன.

கடந்த மாதம் அமெரிக்காவில் வெலிங்டனில் நடந்த கோயில் கும்பாபிஷேகத்துக்கு சுவாமிக்கு உரிய வஸ்திரங்கள் மற்றும் ஆடை, அலங்காரங்களை செய்து அனுப்பி வைத்தேன். அந்த கும்பாபிஷேகத்துக்கு பழநியில் இருந்து குருக்கள் 4 பேர் சென்றிருந்தனர். கும்பாபிஷேகம் நடத்துபவர்கள் எனது துணி வேலைப்பாடுகளை பார்த்துவிட்டு என்னையும் அமெரிக்காவுக்கு வருமாறு அன்புடன் அழைத்தனர். அப்போது ஆர்டர்கள் நிறைய இருந்ததால் செல்லவில்லை.

ஒன்றரை லட்சம்

பெரிய தேருக்கு தேவையான வஸ்திர அலங்காரத்துக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவாகும். ராஜ அலங்கார உடைகள் குறைந்தபட்ச வேலைப்பாடுடன் ரூ.3,500-க்கு வடிமைக்கிறோம். வேலைப்பாடுகள் அதிகமானால் விலை கூடுதலாகும். இந்தத் தொழிலை தெய்வத்துக்கு செய் யும் சேவையாக கருதுவதால் வஸ் திரங்களை சிறப்பாக உருவாக்க முடிகிறது என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE