தென்பெண்ணையாற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்கள்: ஒருவர் மீட்பு; இருவர் மாயம்

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: திருவெண்ணெய்நல்லூர் அருகே தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய 3 பேரில் ஒருவர் மீட்கப் பட்டார். இருவர் மாயமாகியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை நிரம்பியதை அடுத்து அங்கிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தென் பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல்வாலை கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் கார்த்திகேயன் (38), ராஜமணி மகன் ரகு (30), அத்தியூர்திருக்கை கிராமத்தைச் சேர்ந்த காத்தவராயன் (32) ஆகிய மூவரும் கடந்த 11-ம் தேதி டி.எடையார் கிராமத்தில் ஞானசீலன் என்பவர் வீட்டில் கட்டுமான வேலைக்காக சென்றனர்.

அங்கேயே தங்கி வேலை செய்த அவர்கள், நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கொங்கராயனூரில் இருந்து அருளவாடி செல்லும் தென்பெண்ணை ஆற்று தரைப் பாலத்தின் மீது தண்ணீர் சென்று கொண்டிருந்ததால், மூவரும் பைக்கை தள்ளிக்கொண்டு அந்த தரைப் பாலத்தில் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்ததில் 3 பேரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதையறிந்த ஊர்மக்கள் 3 பேரையும் மீட்க முயற்சித்தனர். இதில் கார்த்திகேயன் மட்டும் மீட்கப்பட்டுள்ளார். மற்ற இருவரும் மாயமாகினர். அவர்களை தேடும் பணியை திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்