சென்னை: சென்னையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் மாண்டஸ் புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட மரக்கழிவு குப்பைகள் மாநகரின் பல்வேறு பகுதிகளில் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. நான்கு நாட்களாக குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது வருத்தமளிக்கிறது.
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக மணிக்கு 80 கி.மீ வேகத்தில் காற்று வீசியதில் மாநகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. சில இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. புயல் மற்றும் மழையால் சாய்ந்த மரங்களும், மரக்கிளைகளும் உடனடியாக வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன. தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளை பாட்டாளி மக்கள் கட்சி பாராட்டியிருந்தது.
ஆனால், அகற்றப்பட்ட மரங்கள் மற்றும் மரக்கிளைகளில் இருந்து விழுந்த இலைகள் மற்றும் சுள்ளிகள் இன்று வரை அப்புறப்படுத்தப்படவில்லை. அவை அனைத்து துப்புரவுத் தொழிலாளர்களால் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. அவை உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவற்றை அள்ளிச் செல்வதற்கு வாகனங்கள் வராததால், நான்கு நாட்களாக அவை அப்படியே கிடக்கின்றன.
» தை அமாவாசை பித்ரு பூஜைக்கு மதுரையில் இருந்து காசிக்கு சிறப்பு ரயில்
» ‘கல்வி உரிமை சிறை கைதிகளுக்கும் உண்டு’ - நூலக வசதியை மேம்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு
மாண்டஸ் புயல் கடந்த 9ம் தேதி இரவே கரையை கடந்து விட்டாலும் கூட, அதன் பிறகு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 4 நாட்களாக அகற்றப்படாத குப்பைகள் சாலைகளிலும், தெருக்களிலும் பரவிக் கிடக்கின்றன. தொடர்ந்து பெய்து வரும் மழை நீரில் ஊறுவதால் அவற்றிலிருந்து தாங்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. மரக்கழிவு குப்பைகள் உடனடியாக அகற்றப்படாவிட்டால் நிலைமை மேலும் மோசமடைந்து, தொற்று நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளன.
புயல் காற்றில் விழுந்த மரங்களையும், மரக்கிளைகளையும் அகற்றுவதில் தமிழக அரசுத் துறைகளும், சென்னை மாநகராட்சியும் காட்டிய வேகம் ஈடு இணையற்றது. துப்புரவு தொழிலாளர்கள் ஆற்றிய பணிகள் பாராட்டத்தக்கவை. அதே அளவு வேகம் மரக்கழிவு குப்பைகளை அகற்றுவதில் காட்டப்படாதது ஏன்? கடந்த காலங்களில் மிக மோசமான சூழலிலும் கூட குப்பைகள் அகற்றப்படாமல் இருந்தது கிடையாது.
அளவுக்கு அதிகமாக மரக்கழிவு குப்பைகள் குவிந்து கிடப்பதால் அவற்றை அப்புறப்படுத்துவதற்கு அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் தேவைப்படுவதாகவும் தெரிகிறது. தமிழக அரசு நினைத்தால் சென்னையில் கிடக்கும் குப்பைகளை அகற்றுவதற்கு தேவையான வாகனங்களை ஏற்பாடு செய்வது ஒரு பொருட்டே இல்லை. சென்னை வெளியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் வாகனங்கள், தனியார் வாகனங்கள் ஆகியவற்றைக் கொண்டு, ஒரே நாளில் குப்பைகளை அகற்றி சென்னையை தூய்மையாக்க முடியும்.
எனவே, இனியும் தாமதிக்காமல் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் குவிந்து கிடக்கும் மரக்கழிவு குப்பைகளை உடனடியாக அகற்ற தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நோய்ப்பரவலைத் தடுக்க குப்பைகள் அகற்றப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினிகளை தெளிக்க வேண்டும்." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
51 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago