தலைமைச் செயலக உதவி அலுவலர் பணிக்கு தேர்வு: டிச. 18-ம் தேதி நடைபெறுகிறது

By செய்திப்பிரிவு

சென்னை: தலைமைச் செயலக உதவி அலுவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு டிச. 18-ம் தேதி நடைபெற இருக்கிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணியில் அடங்கிய உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு, டிச. 18-ம் தேதி காலை மற்றும் மதியம் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

நுழைவுச் சீட்டு பதிவிறக்கம்: விண்ணப்பதாரர்கள் ஒருமுறை பதிவேற்றம் (OTR) மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு தமிழ்நாடுஅரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்