மதுரை: தை அமாவாசையையொட்டி, காசியில் முன்னோர்களுக்கு பித்ரு பூஜை செய்ய மதுரையிலிருந்து சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மதுரையில் இருந்து ஜனவரி 16ல் இந்த சிறப்பு சுற்றுலா ரயில் புறப்படுகிறது. ஜனவரி 19ல் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி அலோபி தேவி சக்தி பீடம் தரிசனம், ஜனவரி 20-ல் கங்கையில் புனித நீராடி காசி விஸ்வநாதர், அன்னபூரணி, ஸ்ரீ விசாலாட்சி சக்தி பீட தரிசனம் மற்றும் மாலை ஆரத்தி, ஜனவரி 21ல் கயாவில் முன்னோர்களுக்கு பிண்ட பூஜை செய்து மங்கள கௌரி சக்தி பீட தரிசனம், ஜனவரி 23ல் காமாக்கியா தேவி சக்தி பீட தரிசனம், ஜனவரி 25ல் கொல்கத்தா காளி தேவி, காளிகாட், பேளூர் மடம், தச்சினேஸ்வரர் தரிசனம், ஜனவரி 26 அன்று ஒடிசா பூரி கொனார்க் சூரிய கோயில், சந்திரபாகா கடற்கரை, பூரி ஜெகநாதர், பிமலா தேவி சக்தி பீடம் தரிசனம் முடித்து ஜனவரி 28-ல் சுற்றுலா ரயில் மதுரை வந்து சேருகிறது.
இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி ரயில் கட்டணம் தங்குமிடம், உணவு, உள்ளூர் பேருந்து வசதி ஆகிய உட்பட நபர் ஒருவருக்கு ரூபாய் 21,500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குளிர் சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டியில் பயணம் செய்ய கட்டணம் ரூ. 27,800 வசூக்கப்படுகிறது. பயண சீட்டுகளை www.ularail.com என்ற இணையதளத் திலும் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 73058-58585 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago