சென்னை: அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதில் நாட்டிலேயே முதலிடம் பெற்று தமிழகம் சாதனை படைத்துள்ளது.
அனைத்து மக்களுக்கும் தரமான, இலவச மருத்துவ சேவை வழங்கப்படுவதை நோக்கமாக கொண்டது ‘அனைவருக்கும் நலவாழ்வு திட்டம்’. ஆண்டுதோறும் டிச.12-ம் தேதி (இன்று) அனைவருக்கும் நலவாழ்வு திட்ட தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டில், ‘நாம் விரும்பும் ஆரோக்கியமான எதிர்கால உலகத்தை அனைவருக்கும் உருவாக்குவோம்’ என்ற மையக் கருத்துடன் இதற்கான விழா, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்த 2 நாட்களாக (டிச.10, 11)கொண்டாடப்பட்டது. மத்திய, மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள், பொது சுகாதாரத் துறை நிபுணர்கள் கலந்து கொண்ட இந்தநிகழ்வில் அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள் கவுரவிக்கப்பட்டன.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைவருக்கும் நலவாழ்வு மையங்களில் கடந்த அக்.12-ம்தேதி முதல் டிச.8-ம் தேதி வரை 22.59 லட்சம் பேருக்கு தொலைதொடர்பு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நாட்டிலேயே தமிழகம் முதலிடம் பிடித்ததற்கான பாராட்டு சான்றிதழ், கேடயத்தை தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷுக்கு, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா வழங்கி கவுரவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago