புயலால் உருவான 644 டன் மரக் கழிவுகள் அகற்றம்: மெரினாவில் அனுமதி மறுப்பால் பட்டினப்பாக்கத்தில் குவிந்த மக்கள்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகரில் மேன்டூஸ் புயலால் உருவான 644 டன் மரக் கழிவுகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் 261 மர அறுவை இயந்திரங்கள், 67 டெலஸ்கோபிக் மர அறுவை இயந்திரங்கள், வாகனங்களில் பொருத்தப்பட்ட 2 மர அறுவை இயந்திரங்கள், 6 ஹைட்ராலிக் மரஅறுவை இயந்திரங்கள் ஆகியவற்றுடன் மாநகராட்சி பணியாளர்கள் மேன்டூஸ் புயலை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருந்தனர்.

இந்நிலையில் 9-ம் தேதி மேன்டூஸ் புயல் கரையைக் கடந்தபோது ஏற்பட்ட சூறைக்காற்றால் 207 மரங்களும், 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மரக் கிளைகளும் சாலைகளில் விழுந்தன. மரங்கள்மற்றும் மரக் கிளைகள் அனைத்தையும் மாநகராட்சி பணியாளர்கள் 9-ம் தேதி இரவு முதலே களத்தில் இறங்கி மர அறுவை இயந்திரங்கள் மூலமாக அகற்றத் தொடங்கினர். அவ்வாறு மொத்தம் 644 டன் அளவில் மரக் கழிவுகள், 100டிப்பர் லாரிகளில் 291 நடைகளாக கொடுங்கையூர் மற்றும் பெருங்குடிகுப்பை கொட்டும் வளாகங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன.

பட்டினப்பாக்கம் கடற்கரை.. மாநகராட்சி சார்பில் புயலுக்கு முன்பாக பட்டினப்பாக்கம் கடற்கரை மற்றும் அடையாறு முகத்துவாரப் பகுதியிலிருந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைக் கழிவுகள்மாநகராட்சி சார்பில் அகற்றப்பட்டன. தற்போது மழை நின்றுவிட்ட பிறகு, அப்பகுதிகளில் மீண்டும் அதிக அளவில் கழிவுகள் தேங்கியுள்ளன. அவற்றை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில் அப்பணிகள் நிறைவடையும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேன்டூஸ் புயலை தொடர்ந்துமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினா கடற்கரையில் மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அதையும் மீறி செல்பவர்களை தடுப்பதற்காக நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை கடற்கரையோரம் இரும்பு தடுப்புகளால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. கண்காணிப்பு பணியில்போலீஸார் தொடர்ந்து ஈடுபட்டுஉள்ளனர்.

தற்போது புயல் கரையை கடந்துவிட்டாலும், மழை நின்றாலும் மெரினாவில் ஏற்கெனவே தேங்கிய மழை நீர் இன்னும் முழு அளவில் வடியவில்லை என்பதாலும் நேற்றும் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து நேற்று விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் பட்டினப்பாக்கத்தில் அதிகளவில் திரண்டனர். இதனால், அப்பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்