சென்னை: சென்னையில் ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என்றும், பயணிகள் உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 135 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 170 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. தற்போது மணிக்கு 14 கி.மீ. தூரத்தில் நகர்ந்து வருகிறது. மேலும், வெள்ளிக்கிழமை (நவ.9) இரவுக்கும், சனிக்கிழமை (நவ.10) அதிகாலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் கடந்த சில மணி நேரமாக நல்ல மழை பெய்து வருகிறது. ஆனாலும், மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே தகவல் அறிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் உள்ள ரயில்பாதை, மேம்பாலங்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும்,பேரிடர் கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணிகள் 044-25330714, 044-25330952 ஆகிய உதவி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், சூழ்நிலைக்கு ஏற்ப சென்னை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவது முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago