சென்னை: தமிழகத்தில் இன்று (டிச.9) புயல் கரையைக் கடக்கும் பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் தீவிர புயல் தற்போது வலு குறைந்து சென்னைக்கு தெற்கு, தென் கிழக்கே, 260 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக் கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு மற்றும் நாளை அதிகாலைக்கு இடைப்பட்ட நேரத்தில் புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புயல் கரையைக் கடக்கும் பகுதிகளைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று இரவு சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் கடலோரப் பகுதிகளில் இரவு நேரங்களில் போக்குவரத்து நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே புயல் கரையை கடக்கும் பகுதிகளான புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகில் இரவு முதல் காலை பேருந்துகள் இயக்கப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago