சென்னை: புயல், மழையின் போது மக்கள் அவசரத் தேவைக்காக அல்லது புகார்களைத் தெரிவிக்க 1913 உதவி எண்ணிலும், 044-2561 9206. 044-2561 9207 மற்றும் 044-2561 9208 ஆகிய எண்களிலும், 9445477205 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி: இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையில், வங்கக்கடல் பகுதியில் நிலவியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது புயல் சின்னமாக வலுவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தப் புயலினால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
> குறிப்பாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேக்கம் ஏற்பட்டால் உடனடியாக வெளியேற்ற 805 மோட்டார் பம்புகள் தயார்நிலையில் உள்ளன.
> பொதுமக்களை தங்க வைப்பதற்காக 169 நிவாரண மையங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
» இமாச்சல் வெற்றியால் அடுத்து வரும் தேர்தல்களிலும் காங்கிரஸுக்கு ஊக்கம்: ஆனந்த் ஷர்மா நம்பிக்கை
> புயல் கரையைக் கடக்கும் பொழுது மணிக்கு 80 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும் என்பதையொட்டி, காற்றின் வேகத்தின் காரணமாக விழும் மரம் மற்றும் மரக்கிளைகளை அகற்றுவதற்காக 272 மர அறுவை இயந்திரங்கள், வாகனங்களில் பொருத்தப்பட்ட 2 மர அறுவை இயந்திரங்கள், 6 ஹைட்ராலிக் மர அறுவை இயந்திரங்கள், ஒரு பகுதிக்கு ஒரு ஜேசிபி என 45 ஜேசிபி வாகனங்கள், 115 டிப்பர் லாரிகள் தயார்நிலையில் உள்ளன.
> ஒவ்வொரு வார்டிலும் அவசர கால தேவைக்காக ஒரு சிறிய இலகுரக வாகனம் (Tata Ace) மற்றும் 10 பணியாளர்களை தயார்நிலையில் வைத்திருக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
> வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை அறிவித்துள்ள நிலையில், பொதுமக்கள் மெரினா, பெசன்ட் நகர் போன்ற கடற்கரைப் பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
> புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், மரங்களின் அருகாமையில் நிற்பதையோ அல்லது தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களின் கீழ் நிற்பதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
> புயல் மற்றும் மழையின் போது பொதுமக்கள் தங்களின் அவசரத் தேவைக்காக அல்லது புகார்களைத் தெரிவிக்க மாநகராட்சியின் 1913 உதவி எண்ணிலும், 044-2561 9206. 044-2561 9207 மற்றும் 044-2561 9208 ஆகிய தொலைபேசி எண்களிலும், 9445477205 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
> பொதுமக்களின் புகார்களை விரைந்து பெறவும், அதன்மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் ஏதுவாக, 10 இணைப்புகளுடன் செயல்பட்டு வந்த 1913 உதவி எண்ணானது, 50 இணைப்புகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
49 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago