அமெரிக்காவில் விஷத் தாவரங்களின் பட்டியலில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் தற்போது நமது மண்ணை நஞ்சாக்கிக் கொண்டிருக்கின்றன. கோவை மாவட்டத்தில் பரவிக் கிடக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
இந்த மரத்தின் பூர்வீகம் மெக்ஸிகோ. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய இந்த மரம் 1870-ல் இந்தியாவில் முதன்முறை யாக மகாராஷ்டிர மாநிலத்தில் வேரூன்றத் தொடங்கியது. 1950-ல் தமிழகத்தில் இந்த மரம், தற்போது மண்ணை மலடாக்கத் தொடங்கியுள்ளது.
சீமைக் கருவேலமரங்கள் சுற்றுச் சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்பைக் கருத்தில்கொண்டு, அமெரிக்க தாவரவியல் பூங்கா இதை வளர விடக் கூடாத நச்சு மரப் பட்டியலில் கொண்டு வந்து, அதை ஒழிப்பதற்காக தீவிர பிரச்சாரத்தை மேற்கொண் டது.
மேலும், ஓர் ஆய்வில் இந்த மரத்தின் வேர் சுமார் 175 அடி வரை பூமியை துளைத்து, நிலத்தடி நீரை உறிஞ்சுவது கண்டுபிடிக்கப் பட்டது. வறட்சியான சூழலிலும் வளர்ந்து, விரைந்து பரவும் தன்மை கொண்ட இந்த மரம், காற்றில் உள்ள ஈரப்பசையையும் உறிஞ்சிக் கொள்ளும். இந்த மரம் வளரும் பகுதியே வறட்சிப் பகுதியாக மாறும் அபாயம் உள்ளது.
எதுவுமே பயன்படாது!
இந்த மரத்தின் இலை, காய், விதை எதுவுமே, எதற்குமே பயன்படாது. மேலும், இதை விறகாகப் பயன்படுத்தி எரித்தால் ஏற்படும் புகை, ஆஸ்துமா, மூச்சுத் திணறல் முதலான நோய்களை ஏற்படுத்தும்.
மேலும், குறைந்த அளவு ஆக்சிஜனை உற்பத்தி செய்வதுடன், அதிக அளவு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றும். இதனால், சுற்றுச்சூழலுக்கும் இது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். இதில், அடர்த்தியான கிளைகள் இல்லாததால் பறவைகளும் நாடாது. மேலும், கூர்மையான முட்கள் அதிகம் இருப்பதால் பறவைகள் கூடுகட்டுவதில்லை.
பருவ மழை பொய்ததால் நிறைய இடங்களில் வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சாகுபடி மேற்கொள்ளப்படாத விளை நிலங்களை சீமைக்கரு வேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. கோவை மாவட்டத்தில் பரவியுள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென அனைத்துத் தரப்பினரும் குரல் கொடுக்கின்றனர்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.எஸ்.சுந்தரம் ‘தி இந்து’விடம் கூறியது: சீமைக் கருவேல மரங்களால் நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது. குளங்கள், கிணறுகள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்த் தேக்கங்களில் இம்மரங்களின் இலை உதிர்வதால், அந்த நீர் விஷமாகிவிடுகிறது. எனவே, நீர்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன.
நமது நாட்டு கருவேல மரங்கள் உயர்ந்து வளரக் கூடியதுடன், மழை நீரை பூமிக்குள் இறங்குவதைத் தடுக்காத வேர்களைக் கொண்டவை. அவை, வேளாண் தொழிலுக்குத் தேவையான ஏர்க் கலப்பை மற்றும் உபகரணங்கள் செய்யப்பயன்படுகின்றன.
ஆனால், சீமைக் கருவேல மரங்கள் நமக்குத் தீமையை மட்டுமே வழங்கக் கூடியவை. கோவை மாவட்டத்தில் நொய்யல், கௌசிகா, ஆழியாறு, பாலாறு, உப்பாறு, திருமூர்த்தி அணை உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளின் பாசனப் பகுதிகளில் இவை பரந்துகிடக்கின்றன.
அதுமட்டுமின்றி, சாலையோரங் களிலும், அரசு புறம்போக்கு நிலங்களிலும் ஏராளமான வளர்ந் துள்ளன. மாவட்டம் முழுவதும் உள்ள பெரும்பாலான குளங்களின் பரப்பை இவை ஆக்கிரமித்துள் ளன. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளில் விவசாயத்துக்கும், குடிநீர்த் தேவைக்கும் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
சீமைக் கருவேல மரங்களை அகற்றுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், உச்ச நீதிமன்றமும் இது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
சில மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வரு கின்றன. எனினும், கோவை மாவட் டத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் பரவியுள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.
பயன் தரும் மரங்கள்
எனவே, மண்ணை நஞ்சாக்கும் சீமைக்கருவேல மரங்களை கோவை மாவட்டத்திலிருந்து அகற்றவும், அந்த இடங்களில் மக்களுக்குப் பயன்தரும் வேம்பு, ஆலமரம் உள்ளிட்ட பல்வேறு மரங்களை வளர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மட்டுமின்றி, தனியார் அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இணைந்து இப்பணியை மேற் கொள்ள வேண்டும். அப்போது தான் நிலத்தடிநீர், சுற்றுச்சூழல் உள்ளிட்டவற்றுக்கு கேடுவிளை விக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றி, மண்ணையும், விவசாயத்தையும் பாதுகாக்க முடியும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago