சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு

By செய்திப்பிரிவு

சென்னை: அதிகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, 10 மாவட்டங்களுக்கும் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.

இதுகுறித்து வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கை: அதிகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, முதல்வர் அறிவுரையின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

* தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 10 குழுக்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களுக்கு விரைந்துள்ளன.

* சென்னையில் 169 நிவாரண மையங்களும், தாழ்வான பகுதிகளில் மழைநீரை வெளியேற்ற 805 நீர் இறைப்பான்களும் தயார் நிலையில் உள்ளன. 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், 5,093 நிவாரண முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் தயாராக உள்ளன.

* தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்க ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அணைகள், நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு, நீர்வரத்தை தொடர்ந்து கண்காணிக்கவும், உபரிநீர் திறப்பின்போது மக்களுக்கு உரிய முன்னறிவிப்பு வழங்கவும் ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

* மாநில, மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள்24 மணி நேரமும் கூடுதல் அலுவலர்களுடன் இயங்குகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்