பெண்ணாடம் அருகே இரு பிரிவு மாணவர்களிடையே மோதல், கல்வீச்சு: போலீஸார் உட்பட 14 பேர் காயம்

By செய்திப்பிரிவு

விருத்தாசலம்: பெண்ணாடம் அருகே இருபிரிவு மாணவர்களிடையே ஏற்பட்ட கல்வீச்சு சம்பவத்தில் போலீஸார் உட்பட 14 பேர் காயமடைந்தனர்.

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த துறையூர் பகுதியைச் சேர்ந்த வீரமுத்து மகன் ராஜா என்பவரும், முருகன்குடியைச் சேர்ந்த நசின்ராஜ் என்பவரும் அரியலூர் மாவட்டம் கூவத்தூர் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் 2-ம் ஆண்டு படித்து வருகின்றனர். இருவருக்கும் நேற்று முன்தினம் பேருந்தில் வரும்போது வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரும் உறவி னர்கள் மற்றும் நண்பர்களுக்கு இதுபற்றி தகவல் தெரிவித்துவிட்டு பேருந்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் கருவேப்பி லங்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த ராஜாவின் ஆதரவாளர்கள் நசின்ராஜை சரமாரியாக தாக்கினர். இதற்கு பதிலடி தரும் வகையில் நசின்ராஜின் ஆதரவாளர்கள் முருகன்குடி பேருந்து நிறுத்தத்தில் ராஜாவை சரமாரியாக தாக்கினர். இதையடுத்து ராஜா மற்றும் அவரது உறவினர்கள் பெண்ணாடம் காவல் நிலையம் சென்றுள்ளனர்.

அப்போது நசின்ராஜ் ஆதர வாளர்கள், ராஜா ஆதரவாளர்களை தாக்கினர். இருதரப்புக்கும் இடையே கடுமையான தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருப்பதை அறிந்த பெண்ணாடம் போலீஸார் அவர்களை தடுக்க முயன்றனர். அப்போது இருதரப்பினரும் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் காவல் ஆய்வாளர் முருகேசன், உதவி ஆய்வாளர், இரு போலீஸார் மற்றும் இருதரப்பைச் சேர்ந்த 14 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட போலீஸார் வரவழைக்கப்பட்டு மோதலை கட்டுப்படுத்தினர். இதைத்தொடர்ந்து கல்வீச்சில் தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி இருதரப்பினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து பெண்ணாடம் போலீஸார் இருதரப்பைச் சேர்ந்த 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்